Thursday, April 23, 2020

தமிழரின் வேல் வழிபாடு

தமிழரின் வேல் வழிபாடு :



என்னடா தைப்பூசம் எல்லாம் முடிந்துவிட்டதே, இப்போது இந்த வேல்வழிபாட்டைப்பற்றி பதிவிடுகிறானே என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. தைப்பூசத்திற்கு மட்டும் வேலை வணக்குபவர்களல்லர் யாம்.
"வேலை வணங்குவதே வேலை" யாகக்கொண்டோர். எப்போது பதிவிட்டாலென்ன?

௧) வேல் - பெயர்க்காரணம்:


வெல் = வேல்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது! ஆகவே, வேல் = வெற்றி!

௨) வேல் - தமிழ்த்தொன்மம்: 



ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்! ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா! வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு! சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!  பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன! சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, சிலை மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது.

௩) வேலின்_அமைப்பு: 


பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!  எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி! மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்! ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!

௪) வேலின் தோற்றம்!



* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

௫) வேலும் ஈட்டியும் ஒன்றா??


வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

௬) வேல் வழிபாடு:




சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவர். இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

"வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி" என்று அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே -(ஐங்குறுநூறு, கபிலர்)

* எதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து, அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்! இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா. உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தையா?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை! மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"  என்று இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி.

௭) சிலப்பதிகாரத்தில் வேல்: 


பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ.... சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்! -ன்னு முருக பக்தரான நக்கீரர், இரண்டு அடிகளே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?

- என்று வேல் விருத்தமாய், அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே! -ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, 'பாட்டு மடை'யாகப் பெருகி வரும்!

௮) முருகன் வேறு வேல்வேறல்ல!


வேலுக்கு = உடம்பிடித் தெய்வ என்பது ஒரு பெயர்.
(உடன் பிடித் தெய்வம்)

நன்றி வணக்கம்
உதவி : வலைத்தளம்

தமிழவை இலக்கியங்களில் முருகு :


தமிழரின் குறிஞ்சிநிலத்தலைவன் சங்கவிலக்கியங்களில் சேயோன், வெஞ்சேய், அருந்திறல் கடவுள், நெடுவேள், கொற்றவை சிறுவ, பழையோள் குழவி, முருகன் என பலபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். அவற்றுள், முருகு, முருகன் என்றும் இம்முருகை அடியொற்றி தோன்றியிருக்கும் சொற்களையும் தேடவெண்ணினேன். அவ்வகையில் தேடிக்கிடைத்த சிலவற்றை ஈண்டு பதிவிடுகிறேன்.


முருகு என்னும் பெயர் :


முருக்கேறிய முருக்கன் தான் முருகனா? என்னும் ஆய்விற்குள் நாம் செல்லவேண்டாம். பொதுப்பொருளையே அறிந்துகொள்வோம். முருகு என்பதற்கு "இளமை" என்று திவாகர நிகண்டும், "அழகு" என்று பிங்கல நிகண்டும் பொருள்கூறுகின்றன. இளமை என்பது ஒர் உயிரியின் பிறப்பிற்கும் முழுவளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலைமை அல்லது காலம். இளமைப் பருவத்திலேயே உருவச்சிறுமையும் உடல்மென்மையும் அழகுநிறைவும் மறவுணர்ச்சியும் வலிமைமிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால் இளமைக் கருத்திற் சிறுமை, மென்மை, அழகு, மறம், வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும். முருகு என்பதனோடு சேர்த்து "அன்" என்ற ஆண்பால் விகுதிபெற்று "முருகன்" ஆனது. குறிஞ்சி நிலத்தலைவனை இளைஞனென்று கருதியே குறிஞ்சிநில மக்கள் முருகன் என்றனர்.


முருகு என்னுஞ்சொல் பயின்றுவரும் அடிகள் :


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

புறம் 16


"சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்"

புறம் 23


"முருகொத் தீயே முன்னியது முடித்தலின்"

புறம் 56


"முருகுமெய்ப் புலைத்தி போலத்"

புறம் 259


"அணங்குடை முருகன் கோட்டத்துக்"

புறம் 299


"முருக னற்போர் நெடுவே ளாவி"

அகம் 1


"முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா"

அகம் 22


"சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து"

அகம் 59


"முருகென மொழியும் ஆயின்"

ஐங்குறுநூறு


"மடவை மன்ற வாழிய முருகே!"

நற்றிணை 34


"முருகயர்ந்து வந்த முதுவாய் வேந்தன்"

குறுந்தொகை 362


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

பொருநராற்றுப்படை 131ஆம் அடி


"முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர்"

முருகாற்றுப்படை 243, 244


"அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக"

முருகாற்றுப்படை 269


"படையோர்க்கு முருகயர"

மதுரைக்காஞ்சி 38


"அருங்கடி வேலன் முருகொடு வளைஇ"

மதுரைகாஞ்சி 611


"முருகமர்பூ முரண்கிடக்கை"

பட்டினப்பாலை 37


"முருகியம்" - முருகியப்பறை - வெறியாட்டுப்பறை

தொல்காப்பியம், பொருள். 18 உரை




*****
நன்றி. வணக்கம்🙏

***********************

பதிவிற்குதவிய நூல்கள் :


1. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
2. அகநானூறு
3. புறநானூறு
4. ஐங்குறுநூறு
5. நற்றிணை
6. பொருநராற்றுப்படை
7. முருகாற்றுப்படை
8. மதுரைக்காஞ்சி
9. பட்டினப்பாலை
10. தொல்காப்பியவுரை

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

**********************

பதிற்றுப்பத்து பாடினோரும் பாடப்பட்டோரும் பெயர்த்தொகுப்பு

பதிற்றுப்பத்து பாடினோரும் பாட்டுடைத்தலைவர்களும்:


பத்துப்பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப்பகுதிகளைக் கொண்ட நூலாதலால் 'பதிற்றுப்பத்து' எனப்பெயர்பெற்றது. ஒவ்வொரு பத்தும் தனித்தனியே ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். நூலின் முதற் பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும்,  முதலாம்பத்து பாடல்கள் உதியன் சேரலாதனைப் பற்றிப் பாடப்பட்டது என்கின்றனர். ஆனால் தெளிவான சான்று இல்லை. காரணம், இந்தப் பாடல்களில் ஒன்றுகூட கிடைக்கவில்லை. இந்நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றியும் அறியப்படவில்லை.


௨) இரண்டாம் பத்து:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர்க்கண்ணனார் பாடியது.

௩) மூன்றாம் பத்து:

பல்யானைச்செல்கெழு குட்டுவனை பாலைக்கௌதமனார் பாடியது.

௪) நான்காம் பத்து:

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது.

௫) ஐந்தாம் பத்து:

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது.

௬) ஆறாம் பத்து:

ஆடுகோட்பாட்டுச்சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.

௭) ஏழாம் பத்து:

செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௮) எட்டாம்பத்து:

தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது.

௯) ஒன்பதாம் பத்து:

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.


நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

அகநானூறு பாடிய புலவர்கள் பெயர்த்தொகுப்பு

அகநானூறு பாடிய புலவர்கள் பெயர்கள் : 146


தமிழ்கூறும் நல்லுலகில் பல்புலவர்கள் பாடிய அகவாழ்க்கையைப் பற்றிய பாடல்களை நம்முன்னோர், அகநானூறு என்னும் தலைப்பின்கீழ் வைத்து தொகுத்துக்காத்தனர். அப்பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்களை வலைத்தளத்திலும் நூல்களிலும் தேடியெடுத்து நுங்கள் பார்வைக்கு பதிகிறேன். நன்றி. வணக்கம்.



1)அஞ்சியத்தை மகள் நாகையார்
2)அண்டர்மகன் குறுவழுதியார்
3)அதியன் விண்ணத்தனார்
4)அந்தி இளங்கீரனார்
5)அம்மூவனார்
6)அள்ளூர் நன்முல்லையார்

7)ஆமூர்க் கவுதமன் சாதேவனார் (ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்)
8)ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
9)ஆலங்குடி வங்கனார்
10)ஆலம்பேரி சாத்தனார்
11)ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
12)ஆவூர் மூலங்கிழார்
13)ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

14)இடைக்காடனார்
15)இடையன் சேந்தங்கொற்றனார்
16)இடையன் நெடுங்கீரனார்
17)இம்மென்கீரனார்
18)இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
19)இறங்குகுடிக் குன்றநாடன்

20)ஈழத்துப் பூதன் தேவனார், மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

21)உம்பற் காட்டு இளங்கண்ணனார்
22)உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
23)உலோச்சனார்
24)உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்
25)உறையூர் சல்லியன் குமரனார்
26)உறையூர் மருத்துவன் தாமோதரனார்
27)உறையூர் முதுகூத்தனார்

28)ஊட்டியார்

29)எயினந்தை மகனார் இளங்கீரனார்
30)எருமை வெளியனார்
31)எருமை வெளியனார் மகனார் கடலனார்
32)எழூஉப்பன்றி நாகன் குமரனார்

33)ஐயூர் முடவனார்

34)ஒக்கூர் மாசாத்தனார்
35)ஒக்கூர் மாசாத்தியார்
36)ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
37)ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

38)ஓரம்போகியார்

39)ஔவையார்

40)கடியலூர் உருத்திரங் கண்ணனார்
41)கடுந்தொடைக்காவினார்
42)கபிலர்
43)கயமனார்
44)கருவூர்க் கண்ணம்பாளனார்
45)கருவூர்க் கண்ணம்புல்லனார்
46)கருவூர்க் கந்தபிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்)
47)கருவூர்க் கலிங்கத்தார்
48)கருவூர் நன்மார்பன்
49)கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
50)கல்லாடனார்
51)கழார்க் கீரன் எயிற்றியார்

52)காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
53)காவட்டனார்
54)காவன்முல்லைப் பூதனார், காவன் முல்லைப் பூதரத்தனார்
55)காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
56)காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

57)குடவாயிற் கீரத்தனார்
58)குமுழி ஞாழலார் நப்பசலையார்
59)குறுங்குடி மருதனார்
60)குறுவழுதியார்
61)குன்றியனார்

62)கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் (நெய்தற்றத்தனார்)
63)கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

64)கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

65)சாகலாசனார்

66)செயலூர் இளம் பொன் சாத்தன் கொற்றனார்
67)செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார்
68)செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

69)சேந்தன் கண்ணனார்
70)சேரமான் இளங்குட்டுவன்

71)தங்கால் முடக்கொற்றனார்
72)தங்கால் பொற்கொல்லனார்

73)தாயங்கண்ணனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

74)தொண்டியாமூர்ச் சாத்தனார்

75)தொல் கபிலன்

76)நக்கண்ணையார்
77)நக்கீரர், நக்கீரனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரர், மதுரை நக்கீரன்
78)நரைமுடி நெட்டையார்
79)நல்லாவூர் கிழார்
80)நல் வெள்ளியார்
81)நன்பலூர்ச் சிறு மேதாவியார்

82)நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

83)நொச்சி நியமங் கிழார்

84)நோய் பாடியார்

85)பரணர்
86)பறநாட்டுப் பெருங்கொற்றனார்

87)பாண்டியன் அறிவுடைநம்பி
88)பாண்டியன் ஏனாதிநெடுங்கண்ணனார்
89)பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
90)பாலை பாடிய பெருங்கடுங்கோ
91)பாவைக் கொட்டிலார்

92)பிசிராந்தையார்

93)பெருங்குன்றூர் கிழார்
94)பெருந்தேவனார்

95)பேயனார்

96)பொதும்பில் கிழார் வெண்கண்ணனார்
97)பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
98)பொருந்தில் இளங்கீரனார்

99)போந்தைப் பசலையார்

100)மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
101)மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
102)மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்
103)மதுரை இளங்கௌசிகனார்
104)மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
105)மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை எழுத்தாளன்
106)மதுரை கண்ணத்தனார்
107)மதுரைக் கணக்காயனார்
108)மதுரைக் கவுணியன் பூதத்தனார்
109)மதுரைக் கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார்
110)மதுரைக் காஞ்சிப் புலவர்
111)மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
112)மதுரைக் கூத்தனார்
113)மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தானார்
114)மதுரைச் செங்கண்ணனார்
115)மதுரைத் தத்தங் கண்ணனார்
116)மதுரைத் தமிழக் கூத்தன் நாகன் தேவனார்
117)மதுரைத் தமிழக்கூத்தன் கடுவன் மள்ளனார், மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார்
118)மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
119)மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
120)மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
121)மதுரைப் புல்லங் கண்ணனார்
122)மதுரைப் பேராலவாயார்
123)மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
124)மதுரைப் போத்தனார்
125)மதுரை மருதங் கிழார் மகனார் பெருங் கண்ணனார்
126)மதுரை மருதன் இளநாகன், மதுரை மருதன் இளநாகனார், மருதன் இளநாகனார்
127)மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
128)மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
129)மருதம் பாடிய இளங்கடுங்கோ

130)மாமூலனார்
131)மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
132)மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்

133)முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
134)முள்ளியூர்ப் பூதியார்

135)மோசிக்கரையனார்
136)மோசிகீரனார்

137)வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், பேரிசாத்தனார்
138)வடமோதங் கிழார்
139)வண்ணப்புறக் கந்தரத்தனார்

140)விற்றூற்று மூதெயினனார்

141)வீரை வெளியன் தித்தனார்

142)வெண்கண்ணனார்
143)வெள்ளாடியனார்
144)வெள்ளிவீதியார்
145)வெறிபாடிய காமக் கண்ணியார்

146)வேம்பற்றூர்க் குமரனார்

உதவி: வலைத்தளம்
தொகுப்பு: தமிழ் கோ விக்ரம்

புறநானூறு - பாடியோர், பாடப்பட்டோரின் பெயர்த்தொகுப்பு

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும் - பெயர்த்தொகுப்பு :


(யார் யாரைப்பாடியது என்னும் பெயர்த்தொகுப்பு)

அன்புடைத் தமிழர்களே வணக்கம்.
தன்னிகரில்லாத் தமிழரின் புறவாழ்வின் சிறப்பைப்பேசும் பழந்தமிழ்க்கருவூலம் புறநானூறு. புலவர்கள் பலர் பலரைப்பாடிய ஒப்பற்ற இந்நூல் நானூறு செய்யுட்களைக்கொண்டது. அவர்களின் பெயர்களை புறநானூறு பாடியோர் என்றும் புறநானூறு பாடப்பட்டோர் என்றும் பன்னாட்களுக்கு முன்னமே தனித்தனியே அடியேனின் பதிவிட்டிருந்தது தாமனைவரும் அறிந்ததே. இருப்பினும், இப்பாக்கள் யார் யாரைப்பாடியது என்பதை தேடியறிவது அரிதான செயல். ஆகையால், அதனைத்தொகுத்து ஒரே பதிவில் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய பன்னாள் அவா. அதனால், அதைத்தொகுக்கும் பணியை மேற்கொண்டு ௪ நாட்களில் முடித்தேன்.

புறநானூறு என்பது பலரால் பலகாலங்களில் பலரைப்பாடிய தொகுப்பாகும். எனவே, இதில் தமிழவைக்கால பாக்களும் அதற்குப்பின்னே தோன்றிய பாக்களும் என்று இப்புறநானூற்றுநூல் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்புவரை தோன்றிய செய்யுள்கள் அடங்கி இருக்கும். இதில் பழந்தமிழ்ப்பாக்களும் ஆரியக்கதைகளும் அதன் குறிப்புகளுள்ள பாக்களும் என சேர்ந்தே இருக்கும். பாடிய பாடப்பட்டவர்களின் பெயர்களுள் சிலவும் அச்சார்புடையதாகவும் இருக்கும். உள்ளதை உள்ளவாறே தொகுத்துள்ளேன்.

செய்யுட்களை பாடினோர் பாடப்பட்டோர் பெயர்களை மட்டும் அறிவதோடமையாது. புறநானூறு நூலையும் குற்றமறக்கற்று தமிழறத்தோடு வாழ்க.

இப்பெயர்த்தொகுப்பு புறநானூறு நூலில் பயின்றுவரும் பண்டைத்தமிழ்ப்பெயர்களை அறியவிரும்புவோர்க்கு துணைபுரியும் அன்றி, குறிப்பிட்ட செய்யுள் யாரால் யாரைப்பாடியது என்று எளிதில் அறியவியலும்.

பாக்களின் எண்களை தமிழில் இட்டு, அச்செய்யுள் யாரை யார் பாடியது என்பதையும் பொதுப்பாகளுக்கு பாடியவர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.  விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக. நன்றி. வணக்கம்.

(0-०, 1-௧, 2-௨, 3-௩, 4-௩, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10-௰)

*********************************************



௧) இறைவனை பெருந்தேவனார் பாடியது.

௨) சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.

௩) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது.

௪) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பரணர் பாடியது.

௫) சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலை நரிவெரூஉத் தலையார் பாடியது.

௬) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை காரிக்கிழார் பாடியது.

௭) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௮) சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௯) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௰) சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதிபசுங்குடையார் பாடியது.

௧௧) சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவை பேய்மகள் இளவெயினியார் பாடியது.

௧௨) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௧௩) சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௪, ௧௫) சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௧௬) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை பாண்டரங்கண்ணனார் பாடியது.

௧௭) சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

 ௧௮) பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௧௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௨०) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

௨௧) கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

௨௨) சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடியது.

௨௩) பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௪) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௫) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௬) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௭ முதல் ௩௩ வரை) சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௪) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௫) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியது.

௩௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௩௮) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩௯)  சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௪०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௪௧) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௨) ௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடியது.

௪௩) சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் பாடியது.

௪௪) சோழன் நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௫) சோழன் நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் கோவூர்க்கிழார் பாடியது.

௪௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௭) காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௮, ௪௯) சேரமான் கோக்கோதை மார்பனை பொய்கையார் பாடியது.

௫०) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை மோசிகீரனார் பாடியது.

௫௧) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

௫௨) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை மருதனிளநாகனார் பாடியது.

௫௩) சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையை பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

௫௪) சேரமான் குட்டுவன்கோதையை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

௫௫) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௫௬) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).

௫௭) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௮) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனையும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியையும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௯) பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனை மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

௬०) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௬௧) சோழன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னியை கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௬௨) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் கழாத்தலையார் பாடியது.

௬௩) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் பரணர் பாடியது.

௬௪) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

௬௫) சேரமான் பெருஞ்சேரலாதன், இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது
புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது கழாத்தலையார் பாடியது.

௬௬) சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது.

௬௭) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௬௮) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௬௯) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் பாடியது.

௭०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் (கோவூரழகியார்) பாடியது.

௭௧) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது.

௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் பாடியது.

௭௩) சோழன் நலங்கிள்ளி பாடியது. (நல்லுருத்திரன் பாட்டு எனவும் பாடம்)

௭௪) சேரமான் கணைக்காலிரும்பொறை பாடியது.

௭௫) சோழன் நலங்கிள்ளி பாடியது.

௭௬, ௭௭, ௭௮, ௭௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

௮०, ௮௧, ௮௨) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை சாத்தந்தையார் பாடியது.

௮௩, ௮௪, ௮௫) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் பாடியது.

௮௬) காவற்பெண்டு பாடியது (காதற்பெண்டு)

௮௭ முதல் ௧०௧ வரை) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௨) அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது.

௧०௩, ௧०௪) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௫ முதல் ௧௧௧ வரை) வேள்பாரியை கபிலர் பாடியது.

௧௧௨) பாரி மகளிர் பாடியது.

௧௧௩ முதல் ௧௨० வரை) கபிலர் பாடியது.

௧௨௧, ௧௨௨, ௧௨௩, ௧௨௪) மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது.

௧௨௫) தேர்வண் மலையனை வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பாடியது.

௧௨௬) மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௨௭ முதல் ௧௩௫ வரை) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௩௬) ஆய் அண்டிரனை துறையூர் ஓடைக்கிழார் பாடியது.

௧௩௭) நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

௧௩௮, ௧௩௯) ஆய் அண்டிரனை மருதனிளநாகனார் பாடியது.

௧௪०) ஆய் அண்டிரனை ஔவையார் பாடியது.

௧௪௧, ௧௪௨) வையாவிக் கோப்பெரும் பேகனை பரணர் பாடியது.

௧௪௩, ௧௪௪, ௧௪௫) வையாவிக் கோப்பெரும் பேகனை கபிலர் பாடியது.

௧௪௬) வையாவிக் கோப்பெரும் பேகனை அரிசில்கிழார் பாடியது.

௧௪௭) வையாவிக் கோப்பெரும் பேகனை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.

௧௪௮, ௧௪௯, ௧௫०) கண்டீரக்கோப்பெருநள்ளி வன்பரணர் பாடியது.

௧௫௧) இளவிச்சிக்கோவை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௫௨, ௧௫௩)
வல்வில்லோரியை வன்பரணர் பாடியது.

௧௫௪, ௧௫௫, ௧௫௬) கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

௧௫௭) ஏறைக்கோனை குறமகள் இளவெயினியார் பாடியது.

௧௫௮, ௧௫௯, ௧௬०, ௧௬௧) குமணனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௨) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௩) பெருஞ்சித்திரனாரின் மனைவியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௪, ௧௬௫) குமணனை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௬௬) சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௬௭) சோழன் கடுமான்கிள்ளியை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௬௮) பிட்டங்கொற்றனை கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

௧௬௯) பிட்டங்கொற்றனை காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭०) பிட்டங்கொற்றனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௧௭௧) பிட்டங்கொற்றனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭௨) பிட்டங்கொற்றனை வடமண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

௧௭௩) சிறுகுடிக்கிழான் பண்ணனை சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது.

௧௭௪) மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௭௫) ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௧௭௬) ஓய்மான் நல்லியக் கோடானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௧௭௭) மல்லி கிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௮) பாண்டியன் கீரஞ்சாத்தனை (பாண்டிக் குதிரைச்சாக்கையன்) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௯) நாலைக்கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.

௧௮०) ஈர்ந்தூர்க்கிழான் தோயனை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௮௧) வல்லார் கிழான் பண்ணனை சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௧௮௨) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது.

௧௮௩) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியது.

௧௮௪) பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.

௧௮௫) தொண்டைமான் இளந்திரையன் பாடியது.

௧௮௬) மோசிகீரனார் பாடியது.

௧௮௭) ஔவையார் பாடியது.

௧௮௮) பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது.

௧௮௯) மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

௧௯०) சோழன் நல்லுருத்திரன் பாடியது.

௧௯௧) பிசிராந்தையார் பாடியது.

௧௯௨) கணியன் பூங்குன்றன் பாடியது.

௧௯௩) ஓரேருழவர் (ஓர் ஏர் உழவர்) பாடியது.

௧௯௪) பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

௧௯௫) நரிவெரூஉத் தலையார் பாடியது.

௧௯௬) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௯௭) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௯௮) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் பாடியது.

௧௯௯) பெரும்பதுமனார் பாடியது.

௨००) கபிலர் பாடியது.

௨०௧, ௨०௨) இருங்கோவேளை கபிலர் பாடியது.

௨०௩) சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௨०௪) வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடியது.

௨०௫) கடிய நெடுவேட்டுவனை பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

௨०௬) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௨०௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௮) அதியமான் நெடுமானஞ்சியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௯) மூவனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨௧०, ௨௧௧) சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௧௨) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௨௧௩) கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. (கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்பாடிச் சந்து செய்தது)

௨௧௪) கோப்பெருஞ்சோழன் பாடியது.

௨௧௫) கோப்பெருஞ்சோழன் பாடியது. (சோழன் வடக்கிருந்தான், பிசிராந்தையார் வருவார் என்றான். 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர். அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது)

௨௧௬) கோப்பெருஞ்சோழன் பாடியது. (வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.)

௨௧௭) பொத்தியார் பாடியது. (கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர். அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது)

௨௧௮) கண்ணகனார் (நத்தத்தனார்) பாடியது. (பிசிராந்தையார் வடக்கிருந்தார், அதனைக் கண்டு பாடியது)

௨௧௯) கோப்பெருஞ் சோழனை பெருஞ்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.

௨௨०) பொத்தியார் பாடியது. (சோழன் வடக்கிருந்தான். அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார், சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறிதான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது).

௨௨௧) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது)

௨௨௨) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (தன்மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச்சென்று, தாமும் உயிர்விடத்துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப் பாடியது இச்செய்யுள்).

௨௨௩) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது.

௨௨௪) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௨௨௫) சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

௨௨௬) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௨௭) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

௨௨௮) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஐயூர் முடவனார் பாடியது.

௨௨௯) கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை கூடலூர்க்கிழார் பாடியது. (அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது).

௨௩०) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

௨௩௧, ௨௩௨) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௩, ௨௩௪) வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

௨௩௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௬) கபிலர் பாடியது. (வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது).

௨௩௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது).

௨௩௮) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)

௨௩௯) நம்பி நெடுஞ்செழியனை பேரெயின் முறுவலார் பாடியது.

௨௪०) ஆயை குட்டுவன் கீரனார் பாடியது.

௨௪௧) ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௨௪௨) ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை குடவாயிற்தீரத்தனார் (கடவாயில் நல்லாதனார்) பாடியது.

௨௪௩) தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது.

௨௪௪) பாடப்பட்டோரும் பாடினோரும் அறியவியலாவளவிற்கு சிதைந்தே கிடைத்தது இப்பா.

௨௪௫) சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை பாடியது.

௨௪௬) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடியது.

௨௪௭) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டை மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௪௮) ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

௨௪௯) தும்பி சொகினனார் (தும்பிசேர் கீரனார்) பாடியது.

௨௫०) தாயங்கண்ணியார் பாடியது.

௨௫௧, ௨௫௨) மாற்பித்தியார் பாடியது.

௨௫௩) குளம்பாதாயனார் பாடியது.

௨௫௪) கயமனார் பாடியது.

௨௫௫) வன்பரணர் பாடியது.

௨௫௬, ௨௫௭) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௫௮) உலோச்சனார் பாடியது.

௨௫௯) கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

௨௬०) வடமோதங்கிழார் பாடியது.

௨௬௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௨௬௨) மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௬௩) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௬௪) உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

௨௬௫) சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௨௬௬) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௬௭, ௨௬௮) இப்பாக்களின் படிகள் கிடைத்தில.

௨௬௯) ஒளவையார் பாடியது.

௨௭०) கழாத்தலையார் பாடியது.

௨௭௧) வெறிபாடிய காமக்கண்ணியார் பாடியது.

௨௭௨) மோசிசாத்தனார் பாடியது.

௨௭௩) எருமை வெளியனார் பாடியது.

௨௭௪) உலோச்சனார் பாடியது.

௨௭௫) ஒரூஉத்தனார் பாடியது.

௨௭௬) மாதுரைப் பூதனிளநாகனார் பாடியது.

௨௭௭) பூங்கணுத்திரையார் பாடியது.

௨௭௮) காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

௨௭௯) ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

௨௮०) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௮௧) அரிசில் கிழார் பாடியது.

௨௮௨) பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

௨௮௩) அடைநெடுங் கல்வியார் பாடியது.

௨௮௪) ஓரம் போகியார் பாடியது.

௨௮௫) அரிசில் கிழார் பாடியது.

௨௮௬) ஒளவையார் பாடியது.

௨௮௭) சாத்தந்தையார் பாடியது.

௨௮௮, ௨௮௯) கழாத்தலையார் பாடியது.

௨௯०) ஒளவையார் பாடியது.

௨௯௧) நெடுங்கழுத்துப்பரணர் பாடியது.

௨௯௨) விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

௨௯௩) நொச்சி நியமங்கிழார் பாடியது.

௨௯௪) பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௨௯௫) ஔவையார் பாடியது.

௨௯௬) வெள்ளை மாளர் பாடியது.

௨௯௭) பாடியவர் பெயர் கிடைத்தில.

௨௯௮) ஆவியார் பாடியது.

௨௯௯) பொன்முடியார் பாடியது.

௩००) அரிசில் கிழார் பாடியது.

௩०௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩०௨) வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது.

௩०௩) எருமை வெளியனார் பாடியது.

௩०௪) அரிசில்கிழார் பாடியது.

௩०௫) மதுரை வேளாசானார் பாடியது.

௩०௬) அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

௩०௭) பெயர் கிடைத்தில.

௩०௮) கோவூர்க்கிழார் பாடியது.

௩०௯) மதுரை இளங்கண்ணிக்கௌசிகனார் பாடியது.

௩௧०) பொன்முடியார் பாடியது.

௩௧௧) ஒளவையார் பாடியது.

௩௧௨) பொன்முடியார் பாடியது.

௩௧௩) மாங்குடி மருதனார் பாடியது.

௩௧௪) ஐயூர் முடவனார் பாடியது.

௩௧௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௩௧௬) மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

௩௧௭) வெம்பற்றூர்க்குமரனார் பாடியது.

௩௧௮) பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௩௧௯) ஆலங்குடி வங்கனார் பாடியது.

௩௨०) வீரை வெளியனார் பாடியது.

௩௨௧) உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௩௨௨) ஆவூர்கிழார் பாடியது.

௩௨௩) பெயர்கள் கிடைத்தில

௩௨௪) ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௨௫) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௨௬) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாடியது.

௩௨௭, ௩௨௮) பெயர்கள் கிடைத்தில.

௩௨௯) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

௩௩०) மதுரை கணக்காயனார் பாடியது.

௩௩௧) உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார்) பாடியது.

௩௩௨) விரியூர் கிழார் பாடியது.

௩௩௩) பெயர்கள் கிடைத்தில.

௩௩௪) மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.

௩௩௫) மாங்குடிக்கிழார் பாடியது.

௩௩௬) பரணர் பாடியது.

௩௩௭) கபிலர் பாடியது.

௩௩௮) குன்றூர்க்கிழார் மகனார் பாடியது.

௩௩௯, ௩௪०) பெயர்கள் கிடைத்தில.

௩௪௧) பரணர் பாடியது.

௩௪௨) அரிசில் கிழார் பாடியது.

௩௪௩) பரணர் பாடியது.

௩௪௪, ௩௪௫) அடைநெடுங்கல்வியார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில.

௩௪௬) அண்டர்மகன் குறுவழுதி பாடியது.

௩௪௭) கபிலர் பாடியது.

௩௪௮) பரணர் பாடியது.

௩௪௯) மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௩௫०) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் பாடியது.

௩௫௧) மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

௩௫௨) பரணர் பாடியது.

௩௫௩) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௩௫௪) பரணர் பாடியது.

௩௫௫) பெயர்கள் கிடைத்தில.

௩௫௬) தாயங்கண்ணனார் பாடியது.

௩௫௭) பிரமனார் பாடியது.

௩௫௮) வான்மீகியார் பாடியது.

௩௫௯) கரவட்டனார் பாடியது.

௩௬०) சங்க வருணர் என்னும் நாகரியர் பாடியது.

௩௬௧) பெயர்கள் கிடைத்தில.

௩௬௨) சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௩) ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௪) கூகைக் கோரியார் பாடியது.

௩௬௫) மார்க்கண்டேயனார் பாடியது.

௩௬௬) தருமபுத்திரனை கோதமனார் பாடியது.

#_௩௬௭) சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஔவையார் பாடியது. (மூவேந்தரையும் ஒருங்கே பாடிய சிறப்புடையது இப்பா)

௩௬௮) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கழாத் தலையார் பாடியது.

௩௬௯) சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவனை பரணர் பாடியது.

௩௭०) சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௧) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௩௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடியது.

௩௭௩) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்கிழார் பாடியது.

௩௭௪, ௩௭௫) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் பாடியது.

௩௭௬) ஓய்மான் நல்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௭௭) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

௩௭௮) சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௯) ஓய்மான்வில்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮०) நாஞ்சில் வள்ளுவனை கருவூர்க்கதப்பிள்ளை பாடியது.

௩௮௧) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னகனார் பாடியது.

௩௮௨) சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் பாடியது.

௩௮௩) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில. (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்).

௩௮௪) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮௫) அம்பர்கிழான் அருவந்தையை கல்லாடனார் பாடியது.

௩௮௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர் கிழார் பாடியது.

௩௮௭) சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை குண்டுகட் பாலியாதனார் பாடியது.

௩௮௮) சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

௩௮௯) நல்லேர் முதியன் ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௩௯०) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது

௩௯௧) பொறையாற்றுக் கிழானை கல்லாடனார் பாடியது.

௩௯௨) அதியமான் நெடுமானஞ்சியின்மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

௩௯௩) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

௩௯௪) சோழிய ஏனாதி திருக்குட்டுவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௩௯௫) சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரனார் பாடியது.

௩௯௬) வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

௩௯௭) கோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனனை எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் பாடியது.

௩௯௮) சேரமான் வஞ்சனை திருத்தாமனார் பாடியது.

௩௯௯) தாமான் தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் பாடியது.

௪००) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

**********************************************

உதவி : பல பதிப்பகத்துப் புறநானூறு நூல் பதிப்புகள் மற்றும் இணையம்

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

Wednesday, April 22, 2020

புறநானூற்றின் பாட்டுடைத்தலைவர்கள் - 150 பேரின் பெயர்த்தொகுப்பு

புறநானூற்றுப் பாட்டுடைத்தலைவர்கள் - 150 :


புறநானூறு பாடப்பட்டோர் பெயர் பட்டியல் சேகரித்து தமிழெண்களிட்டு பதிந்துள்ளேன். நண்பர்கள் பலர் தம் குழந்தைகளுக்கு, தமிழ்ப்பெயரிட வேண்டும், நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள் என்று கேட்பர். அவர்கள், அடியேன் பதிவிட்ட புறநானூறு பாடியோர் பாடப்பட்டோர் மற்றும் பெண்பாற்புலவர்கள் ஆகிய பதிவுகளில் இருக்கும் தமிழ்ப்பெயர்களையும் இனி பதிவிடப்போகும் மற்ற புலவர்கள்,  பாட்டுடைத்தலைவர்களின் பெயர்களையும் தம் மக்களுக்கு சூட்டி களிப்புறலாமே.


புறநானூறு பாடப்பட்டோர் - ௧௫० பாட்டுடைத்தலைவர்கள் - 150 :


௧] அகுதை
௨] அண்டிரன்
௩] அதியமான் நெடுமான் அஞ்சி
௪] அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி
௫] அந்துவஞ் சாத்தன்
௬] அந்துவன் கீரன்
௭] அம்பர் கிழான் அருவந்தை
௮] அவியன்
௯] ஆதன் அழிசி
௧०] ஆதனுங்கன்

௧௧] ஆந்தை
௧௨] ஆமூர் மல்லன்
௧௩] ஆய்
௧௪] ஆய் அண்டிரன்
௧௫] இயக்கன்
௧௬] இருங் கோவேள்
௧௭] இளங் கண்டீரக்கோ
௧௮] இளங் குமணன்
௧௯] இளந் தத்தன்
௨०] இள விச்சிக்கோ

௨௧] இள வெளிமான்
௨௨] ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
௨௩] எயினன்
௨௪] எவ்வி
௨௫] எழினி
௨௬] ஏறைக்கோன்
௨௭] ஏனாதி திருக்கிள்ளி
௨௮] ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
௨௯] ஓய்மான் நல்லியக்கோடன்
௩०] ஓய்மான் நல்லியாதன்

௩௧] ஓய்மான் வில்லியாதன்
௩௨] கடிய நெடு வேட்டுவன்
௩௩] கண்டீரக்கோப் பெரு நள்ளி
௩௪] கண்ணகி
௩௫] கந்தன்
௩௬] கபிலன்
௩௭] கரிகால் வளவன்
௩௮] கரும்பனூர் கிழான்
௩௯] காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
௪०] கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

௪௧] கிள்ளி வளவன்
௪௨] குமணன்
௪௩] கொண்கானங் கிழான்
௪௪] கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை
௪௫] கோப்பெருஞ்சோழன்
௪௬] கோப்பெருஞ்சோழன் நடுகல்
௪௭] சிறுகுடி கிழான் பண்ணன்
௪௮] சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை
௪௯] சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்
௫०] சேரமான் கடுங்கோ வாழியாதன்

௫௧] சேரமான் கணைக்கால் இரும்பொறை
௫௨] சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
௫௩] சேரமான் குட்டுவன் கோதை
௫௪] சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை
௫௫] சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
௫௬] சேரமான் கோக்கோதை மார்பன்
௫௭] சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு
௫௮] சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்
௫௯] சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
௬०] சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

௬௧] சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
௬௨] சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
௬௩] சேரமான் பெருஞ்சேரலாதன்
௬௪] சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
௬௫] சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
௬௬] சேரமான் மாரி வெண்கோ
௬௭] சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
௬௮] சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
௬௯] சேரமான் வஞ்சன்
௭०] சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

௭௧] சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன்
௭௨] சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன்
௭௩] சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
௭௪] சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி
௭௫] சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட் சென்னி
௭௬] சோழன் கரிகாற் பெருவளத்தான்
௭௭] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்
௭௮] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
௭௯] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
௮०] சோழன் செங்கணான்

௮௧] சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
௮௨] சோழன் நலங்கிள்ளி
௮௩] சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
௮௪] சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
௮௫] சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி
௮௬] சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி
௮௭] சோழன் வேற் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி
௮௮] சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
௮௯] தந்து மாறன்
௯०] தருமபுத்திரன்

௯௧] தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
௯௨] தழும்பன்
௯௩] தாமான் தோன்றிக் கோன்
௯௪] தித்தன்
௯௫] தேர் வண் மலையன்
௯௬] தொண்டைமான்
௯௭] நம்பி நெடுஞ்செழியன்
௯௮] நலங்கிள்ளி
௯௯] நள்ளி
௧००] நன்னன்

௧०௧] நாஞ்சில் வள்ளுவன்
௧०௨] நாலை கிழவன் நாகன்
௧०௩] நெடியோன்
௧०௪] நெடுங்கிள்ளி
௧०௫] நெடுமான் அஞ்சி
௧०௬] நெடுவேள் ஆதன்
௧०௭] பண்ணன்
௧०௮] பரணன்
௧०௯] பரதவர்
௧௧०] பாண்டியன் அறிவுடைநம்பி

௧௧௧] பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
௧௧௨] பாண்டியன் கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி
௧௧௩] பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
௧௧௪] பாண்டியன் கீரஞ் சாத்தன்
௧௧௫] பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
௧௧௬] பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
௧௧௭] பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
௧௧௮] பாண்டியன் நெடுஞ்செழியன்
௧௧௯] பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
௧௨०] பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

௧௨௧] பாரி
௧௨௨] பாரி மகளிர்
௧௨௩] பிசிராந்தையார்
௧௨௪] பிட்டங்கொற்றன்
௧௨௫] புல்லி
௧௨௬] புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
௧௨௭] பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
௧௨௮] பேகன்
௧௨௯] பொகுட்டெழினி
௧௩०] பொறையாற்று கிழான்

௧௩௧] மல்லி கிழான் காரியாதி
௧௩௨] மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
௧௩௩] மலையமான் திருமுடிக்காரி
௧௩௪] மலையமான் மக்கள்
௧௩௫] மலையன்
௧௩௬] மாங்குடி மருதன்
௧௩௭] மாவளத்தான்
௧௩௮] முக்காவனாட்டு ஆமூர் மல்லன்
௧௩௯] மூவன்
௧௪०] யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

௧௪௧] வல்லார் கிழான் பண்ணன்
௧௪௨] வல்வில் ஓரி
௧௪௩] வல்வில் வேட்டுவன்
௧௪௪] வாட்டாற்று எழினியாதன்
௧௪௫] விச்சிக்கோன்
௧௪௬] வெளிமான்
௧௪௭] வேங்கைமார்பன்
௧௪௮] வேள் எவ்வி
௧௪௯] வேள்பாரி
௧௫०] வையாவிக் கோப்பெரும் பேகன்

புறநானூறு பாடப்பட்டோர் பெயர்கள் முற்றுப்பெற்றன.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

புறநானூறு பாடல்கள் பாடிய 157 புலவர்கள் பெயர்த்தொகுப்பு

புறநானூறு பாடினோர் :


புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் பட்டியல் வலைத்தளத்தில் தேடி எடுத்து அதற்கு தமிழ் எண்ணுருவில் எண்ணிடப்பட்டுள்ள பட்டியலை இங்கே பதிவிட்டுள்ளேன். இதில் இருபாற்புலவர்களும் அடங்குவர். புறநானூறு மட்டுமல்லாது அனைத்து சங்ககால பெண்பாற்புலவர்கள் பட்டியலை சின்னாட்களுக்கு முன்னரே "தமிழவை பெண்பாற்புலவர்கள்" என்னும் தலைப்பின்கீழ் தனியாக பதிவிட்டிருந்தேன். அன்பர்கள் அதையும் படித்திருப்பீர் என நினைக்கிறேன். நன்றி.


புறநானூறு பாடினோர் - ௧௫௭ புலவர்கள் (157) :


௧] அடை நெடுங் கல்வியார்
௨] அண்டர் மகன் குறுவழுதி
௩] அரிசில் கிழார்
௪] அள்ளூர் நன்முல்லையார்
௫] ஆடுதுறை மாசாத்தனார்
௬] ஆலங்குடி வங்கனார்
௭] ஆலத்தூர் கிழார்
௮] ஆலியார்
௯] ஆவூர் கிழார்
௧०] ஆவூர் மூலங் கிழார்

௧௧] இடைக்காடனார்
௧௨] இடைக்குன்றூர் கிழார்
௧௩] இரும்பிடர்த்தலையார்
௧௪] உலோச்சனார்
௧௫] உறையூர் இளம்பொன் வாணிகனார்
௧௬] உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
௧௭] உறையூர் மருத்துவன் தாமோதரனார்
௧௮] உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
௧௯] உறையூர் முது கூத்தனார்
௨०] ஊன்பொதி பசுங்குடையார்

௨௧] எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
௨௨] எருமைவெளியனார்
௨௩] ஐயாதிச் சிறுவெண்டேரையார்
௨௪] ஐயூர் முடவனார்
௨௫] ஐயூர் மூலங் கிழார்
௨௬] ஒக்கூர் மாசாத்தனார்
௨௭] ஒக்கூர் மாசாத்தியார்
௨௮] ஒரு சிறைப் பெரியனார்
௨௯] ஒரூஉத்தனார்
௩०] ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

௩௧] ஓரம் போகியார்
௩௨] ஓரேருழவர்
௩௩] ஒளவையார்
௩௪] கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
௩௫] கண்ணகனார்
௩௬] கணியன் பூங்குன்றனார்
௩௭] கபிலர்
௩௮] கயமனார்
௩௯] கருங்குழலாதனார்
௪०] கருவூர்க் கதப்பிள்ளை

௪௧] கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
௪௨] கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்
௪௩] கல்லாடனார்
௪௪] கழாத்தலையார்
௪௫] கழைதின் யானையார்
௪௬] கள்ளில் ஆத்திரையனார்
௪௭] காக்கை பாடினியார் நச்செள்ளையார்
௪௮] காரிகிழார்
௪௯] காவட்டனார்
௫०] காவற் பெண்டு

௫௧] காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
௫௨] குட்டுவன் கீரனார்
௫௩] குட புலவியனார்
௫௪] குடவாயிற் கீரத்தனார்
௫௫] குண்டு கட் பாலியாதன்
௫௬] குளம்பாதாயனார்
௫௭] குறமகன் இளவெயினி
௫௮] குறுங் கோழியூர் கிழார்
௫௯] குன்றூர் கிழார் மகனார்
௬०] கூகைக் கோழியார்

௬௧] கூடலூர் கிழார்
௬௨] கோடை பாடிய பெரும்பூதனார்
௬௩] கோதமனார்
௬௪] கோப்பெரும் சோழன்
௬௫] கோவூர் கிழார்
௬௬] கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன்,
௬௭] கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
௬௮] சங்கவருணர் என்னும் நாகரியர்
௬௯] சாத்தந்தையார்
௭०] சிறுவெண்டேரையார்

௭௧] சேரமான் கணைக்கால் இரும்பொறை
௭௨] சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
௭௩] சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
௭௪] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
௭௫] சோழன் நல்லுருத்திரன்
௭௬] சோழன் நலங்கிள்ளி
௭௭] தங்கால் பொற்கொல்லனார்
௭௮] தாமப்பல் கண்ணனார்
௭௯] தாயங் கண்ணனார்
௮०] தாயங் கண்ணியார்

௮௧] திருத்தாமனார்
௮௨] தும்பி சொகினனார்
௮௩] துறையூர் ஓடைகிழார்
௮௪] தொடித்தலை விழுத்தண்டினார்
௮௫] தொண்டைமான் இளந்திரையன்
௮௬] நரிவெரூஉத்தலையார்
௮௭] நல்லிறையனார்
௮௮] நன்னாகனார்
௮௯] நெட்டிமையார்
௯०] நெடுங்கழுத்துப் பரணர்

௯௧] நெடும் பல்லியத்தனார்
௯௨] நொச்சி நியமங் கிழார்
௯௩] பக்குடுக்கை நன்கணியார்
௯௪] பரணர்
௯௫] பாண்டரங் கண்ணனார்
௯௬] பாண்டியன் அறிவுடைநம்பி
௯௭] பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
௯௮] பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
௯௯] பாரதம் பாடிய பெருந்தேவனார்
௧००] பாரி மகளிர்

௧०௧] பாலை பாடிய பெருங் கடுங்கோ
௧०௨] பிசிராந்தையார்
௧०௩] பிரமனார்
௧०௪] புல்லாற்றூர் எயிற்றியனார்
௧०௫] புறத்திணை நன்னாகனார்
௧०௬] பூங்கண் உத்திரையார்
௧०௭] பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு
௧०௮] பெருங்குன்றூர் கிழார்
௧०௯] பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார்
௧௧०] பெருஞ்சித்திரனார்

௧௧௧] பெருந் தலைச் சாத்தனார்
௧௧௨] பெரும் பதுமனார்
௧௧௩] பேய் மகள் இளவெயினி
௧௧௪] பேரெயின் முறுவலார்
௧௧௫] பொத்தியார்
௧௧௬] பொய்கையார்
௧௧௭] பொருந்தில் இளங்கீரனார்
௧௧௮] பொன் முடியார்
௧௧௯] மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
௧௨०] மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

௧௨௧] மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார்
௧௨௨] மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனா ர்
௧௨௩] மதுரைக் கணக்காயனார்
௧௨௪] மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
௧௨௫] மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
௧௨௬] மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
௧௨௭] மதுரைத் தமிழக் கூத்தனார்
௧௨௮] மதுரை நக்கீரர்
௧௨௯] மதுரைப் படை மங்கமன்னியார்
௧௩०] மதுரைப் பூதன் இளநாகனார்

௧௩௧] மதுரைப் பேராலவாயார்
௧௩௨] மதுரை மருதன் இளநாகனார்
௧௩௩] மதுரை வேளாசான்
௧௩௪] மருதன் இளநாகனார்
௧௩௫] மாங்குடி கிழார்
௧௩௬] மார்க்கண்டேயனார்
௧௩௭] மாற்பித்தியார்
௧௩௮] மாறோக்கத்து நப்பசலையார்
௧௩௯] முரஞ்சியூர் முடி நாகராயர்
௧௪०] மோசி கீரனார்

௧௪௧] மோசி சாத்தனார்
௧௪௨] வட நெடுந்தத்தனார்
௧௪௩] வடம வண்ணக்கன் தாமோதரனார்
௧௪௪] வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
௧௪௫] வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
௧௪௬] வட மோதங் கிழார்
௧௪௭] வன் பரணர்
௧௪௮] வான்மீகியார்
௧௪௯] விரிச்சியூர் நன்னாகனார்
௧௫०] விரியூர் நக்கனார்

௧௫௧] வீரை வெளியனார்
௧௫௨] வெண்ணிக் குயத்தியார்
௧௫௩] வெள்ளெருக்கிலையார்
௧௫௪] வெள்ளைக்குடி நாகனார்
௧௫௫] வெள்ளைமாளர்
௧௫௬] வெறி பாடிய காமக்கண்ணியார்
௧௫௭] வேம்பற்றூர்க் குமரனார்

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்