பதிற்றுப்பத்து பாடினோரும் பாட்டுடைத்தலைவர்களும்:
பத்துப்பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப்பகுதிகளைக் கொண்ட நூலாதலால் 'பதிற்றுப்பத்து' எனப்பெயர்பெற்றது. ஒவ்வொரு பத்தும் தனித்தனியே ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். நூலின் முதற் பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், முதலாம்பத்து பாடல்கள் உதியன் சேரலாதனைப் பற்றிப் பாடப்பட்டது என்கின்றனர். ஆனால் தெளிவான சான்று இல்லை. காரணம், இந்தப் பாடல்களில் ஒன்றுகூட கிடைக்கவில்லை. இந்நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றியும் அறியப்படவில்லை.
௨) இரண்டாம் பத்து:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர்க்கண்ணனார் பாடியது.௩) மூன்றாம் பத்து:
பல்யானைச்செல்கெழு குட்டுவனை பாலைக்கௌதமனார் பாடியது.௪) நான்காம் பத்து:
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது.௫) ஐந்தாம் பத்து:
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது.௬) ஆறாம் பத்து:
ஆடுகோட்பாட்டுச்சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.௭) ஏழாம் பத்து:
செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.௮) எட்டாம்பத்து:
தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையை அரிசில்கிழார் பாடியது.௯) ஒன்பதாம் பத்து:
குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment