Wednesday, June 10, 2020

பெருஞ்சித்திரனார்

தனித்தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்நாட்டுக்கொள்கை :


"இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமையிலினின்றும் தமிழன் மீளவே முடியாது.

அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடையமுடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல்களினின்றும், ஆரியப்பார்ப்பனியத்தினின்றும் விடுபடவேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகவேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்". என்று தன் கொள்கையை அறிவித்தார்.

                             -- தென்மொழி இதழின் முகப்பில் நம்மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்.



பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் :




01. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
02. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்
03. உலகியல் நூறு
04. ஐயை (பாவியம்)
05. ஓ! ஓ! தமிழர்களே
06. கழுதை அழுத கதை
07. கொய்யாக்கனி (பாவியம்)
08. சாதியொழிப்பு
09. செயலும் செயல்திறனும்
10. தன்னுணர்வு
11. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -1
12. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
13. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
14. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
15. நூறாசிரியம்
16. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
17. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
18. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
19. பாவியக்கொத்து (பாவியம்)
20. பாவேந்தர் பாரதிதாசன்
21. வேண்டும் விடுதலை



நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment