சோழவரசர்களின் பெருங்கோயில்கள் :
சோழவேந்தர்கள் சிவனையே பெருங்கடவுளாகப் போற்றிப்பரவி சிவனுக்குப் பெருங்கோயில்களைக் கட்டியுள்ளனர். இராசராசனின் பாட்டனார் கண்டராதித்தசோழர் தில்லை இறைவன்மீது ஒரு பதிகத்தைப்பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையுள் வைக்கப்பட்டுள்ளது. கண்டராதித்தனாரின் மனைவியார் பேரரசி செம்பியன்மாதேவியாரே சோழர்க்குடியினருக்கு சிவநேயஞ்சொல்லி வளர்த்தவர். அச்சிவநேயத்தினாலேயே இவர்கள் சிவனுக்குப் பெருங்கோயில்கள் கட்டுவராயினர்.
இராசராசேச்சரம்
கட்டுவித்தவன் : முதலாம் இராசராசன் - 985 - 1014கங்கைகொண்டசோளேச்சரம்
கட்டுவித்தவன் : இராசேந்திரன் - 1012 - 1044இராசராசேச்சரம்
கட்டுவித்தவன் :இரண்டாம் இராசராசன் - 1146 - 1173
மூவுலகேச்சரம் {திரிபுவனேச்சரம்}
கட்டுவித்தவன் :மூன்றாம் குலோத்துங்கன் -1178 - 1218
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment