Sunday, June 7, 2020

சம்பந்தர் செய்தவை

௧) சூழொளிய கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் காதலால் புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை வண்கழுவில் தைத்த மறையோனை

௨) ஒண்கெழுவு ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்தல் ஆக்கியும்

௩) காலத்து நீரெதிர்ந்து சென்று

௪) நெருப்பிற் குளிர்படைத்தும்

௫) பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்து

௬) முன் நேரெழுந்த யாழை முரித்தும்

௭) இருங்கதவம் தான்அடைத்தும்

௮) சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும்

௯) தாழ்பொழில்சூழ் கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்

௰) துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில் நித்தன் செழுங்காசு கொண்டு

௧௧) நிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதற்கொண்டும்

௧௨) அத்தகுசீர் மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன் அதுகொண்டும்

௧௩) மாய்வரிய மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும்

௧௪) பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு

--- நம்பியாண்டார் நம்பிகள்


No comments:

Post a Comment