தமிழிசை ஆய்வுநூல்கள்சில :
உலக இசைநாளாகிய இன்று, உலகமுதலிசையாம் தமிழிசையைப்பற்றிய ஆய்வுநூல்கள் சிலவற்றையறிவோம்.
உலகின் முதலிசை தமிழரிசையாம் தமிழிசையே. அதில் யாதொரு ஐயமும் வேண்டா. ஆரியர் நம்மிசையைக் களவாடி கர்நாடக இசையென்று பெயரிட்டுத் தமதாக்கிக்கொண்டனர். நம்மவர் நம்மிசையினை மறந்தேபோயினர். நம்மிசையை நாம் மீட்டெடுக்க நம்முன்னோர்களும் தமிழிசையறிஞர்களும் பலவாறு பாடுபட்டு பல்லாய்வுகளை மேற்கொண்டு தெள்ளத்தேறிய முடிவுகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றை நாம் யாரும் தேடிப்பார்ப்பதே இல்லை. அறியவேண்டுமென்ற எண்ணமுமில்லை நமக்கு.
நம்மிசையை நாமறிந்துகொள்ள நமக்குதவும் ஆய்வுநூல்கள் பலவுள. ஆனால், சிலவற்றை மட்டும் இங்கே பதிந்துள்ளேன். வாய்ப்புள்ளோர் படித்தறிந்து பழந்தமிழிசையை மீட்கும்பணியில் ஈடுபடவேண்டும்.
இசைவல்லோர் தமிழிசையை தமிழ்வழியிலேயே பாடவேண்டும். தமிழ்வழியிலேயே கற்பிக்கவேண்டும். இசைகற்போர் தமிழ்வழியிலேயே இசைகற்கவேண்டும்.
தமிழிசையாய்வு நூல்கள் சில :
இவற்றில் தலையாயது நம் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய "கருணாமிர்தசாகரம்" நூலின் இருதொகுதிகள்.
௧) கருணாமிர்தசாகரம் - 1
௨) கருணாமிர்தசாகரம் - 2
௩) பாணர் கைவழி என்னும் யாழ்நூல்
௪) யாழ்நூல்
௫) இசைத்தமிழ்
௬) பழந்தமிழிசை
௭) தமிழிசையியல்
௮) கருநாடக சங்கீதம் தமிழிசை
௯) தமிழிசைக்களஞ்சியம் - 4 தொகுதிகள்
௰) தமிழிசைப் பேரகராதி
௧௧) அமுதத்தமிழிசை
௧௨) தமிழிசை இலக்கண மரபு
௧௩) தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்
௧௪) தொல்காப்பியத்தில் இசை
௧௫) தமிழிசை வளம்
௧௬) சங்கத்தமிழிசை
௧௭) சங்க இலக்கியத்தில் இசை
௧௮) சிலப்பதிகாரத்து இசைநுணுக்க விளக்கம்
௧௯) காரைக்கால் அம்மையார் தென்னிந்திய இசையின் தாய்
௨௰) சேக்கிழாரும் இசைத்தமிழும்
௨௧) இசைத்தமிழ் இலக்கண விளக்கம்
௨௨) பண்ணாராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும்
இவ்வாய்நூல்களின் பக்கங்கள் மட்டும் 15000க்கும் மிகுதியாக இருக்கலாம். இன்னும் பல ஆய்வுநூல்கள் உள்ளன. இசைவல்லோர் இவற்றைப்படித்து தமிழிசையை மீட்டெடுக்கவேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம் 🙏
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment