Thursday, April 30, 2020

தமிழி வட்டெழுத்து தமிழ் - எணினி வடிவக்கோப்பு

தமிழி, வட்டெழுத்து, தமிழ் எழுத்துகளின் எணினி வடிவக்கோப்பு :




கோப்பை பதிவிறக்க இவ்விணைப்பைச் சொடுக்கவும் :

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

இந்திய ஒன்றியத்தில் பார்ப்பனர்களின் கொட்டங்கள்

இந்தியாவில் பார்ப்பனர்கள்


மக்கள்தொகையில்----------------------------------- 3 %,
கோயில்களில்--------------------------------------- 100%,
இந்திய ஊடகங்களில்-----------------------------  90%,
மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சர வையில் அலுவலக செயலாளர்கள்...........80%
ஐ.ஏ.எஸ்-----------------------------------------------70%,
ஐ.பி.எஸ்-------------------------------------------------61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்---------------------------56%,
மாநிலத் தலைமை செயலாளர்---------------- 54%,
ஆளுநர்கள்------------------------------------------------54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள்--------------- 41%,
மக்களவை உறுப்பினர்கள்------------------------ 48%,
மத்திய அமைச்சர் -------------------------------------36%

ஆதாரம்: லோக் சந்தா - மராட்டிய ஏடு - 8.8.2016

ஆரிய சூழ்ச்சி புரிகிறதா?
ஒரு பார்ப்பான இராணுவ வீரன் துப்பாக்கி சூட்டில் இறந்தான் என்று வரலாறு இருக்கிறதா..??

மத கலவரத்தை தூண்டிவிட்டு,
அவன் சந்தோசமா தான் இருக்கான்..!!
அடிச்சிகிட்டு சாகுறது நம்ம.?

யாக்கை நிலையாமை

திருமந்திரம் : பத்தாந்திருமுறை

முதற்றந்திரம் - யாக்கை நிலையாமை


ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

                                         -- திருமூலர்



பொழிப்புரை:

உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படுவோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பலவற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் ஒழிவர்.

உழைப்பாளர் நாளும் அம்பேத்கரும்

உழைப்பாளர் நாளும் உழைப்பாளர்களுக்கு அம்பேத்கரின் பணிகளும் :


18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சாலைகளால் தொழில்மயமாகியது உலகம். அதனோடு முதலாளித்துவமும் மிகவிரைவாக வளர்ந்தது. உழைக்கும் மக்களை அடிமைகளாக மிகக்கடுமையாக வேலைவாங்கியது முதலாளித்துவம். நாளொன்றுக்கு 14, 18, 20 மணிநேரம் பணிசெய்ய கொடுமைபடுத்தப்பட்டார்கள். 3, 5 வயது குழந்தைகளும் 12 மணிநேரம் உழைக்கவைக்கும் கொடுமையான காலம் அது.



இதைக்கொடுமைகளையெல்லாம் தாளாத உழைக்கும் மக்கள், கிளர்ந்தெழத்தொடங்கினர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆசுதிரேலியா, பிரான்சு, நெதர்லாந்து, இந்தியா என பலநாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தது.

சாசன இயக்கம், தொழிலாளர் இயக்கம், வேலைநிறுத்தங்கள், கம்யூனிச இயக்கம், சிகாகோ பேரெழுச்சி, இரசிய புரட்சி, இந்தியாவிலும் இரயில்வே ஊழியர்கலின் வேலைநிறுத்தம் என உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன. இத்தகைய உலகப்போராட்டகளில் முதலாளித்துவத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். பலபோராட்டங்கள் உயிரிழப்புகளுக்குப்பிறகு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் 8 மணிநேர வேலை என்னும் வெற்றியை அடைந்தனர்.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிச தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக பின்பற்ற வழிவகுத்தது.



தென்னிந்தியாவின் முதல் கம்யூனிசுட் தோழர் சிங்காரவேலர். பிரிட்டிசு இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் மே 1, 1923 அன்று சென்னையில் கடற்கரையில் தோழர் சிங்காரவேலர் மற்றும் திரு.வி.க தலைமையில் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றன.

**********************

இந்தியாவிலும் பலபோராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும், 14, 18 மணிநேரங்கள் உழைக்கும் கொடுமையே தொடர்ந்தன பல இடங்களில். 1942ஆம் ஆண்டு பிரிட்டிசு வைசிராய் லின்லித்தோ பிரபு வின் அமைச்சரவையில் முதல் தொழிலாளர்நல அமைச்சராக தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டப்பாதுகாப்புத் தோழராக புரட்சியாளர் அம்பேத்கர் பதவியேற்றார்.



அப்போது அண்ணல் பெற்றுத்தந்த சட்டமே இந்தியாவில் உழைக்கும் மக்களின் வேலைநேரம் 8 மணிநேரம் என்பதாகும். அதே 1942ல் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் இணைப்பு மாநாடு ஒன்று நடத்தி, இருபுறத்து சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்தார். இந்த முறைகளே இன்றுவரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

1946ல் அம்பேத்கர் அவர்கள், பாராளுமன்றத்தில் "குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை" தாக்கல் செய்து, 1948ல் அது நடைமுறைப்படுத்த உழைத்தார்.

1945ஆம் ஆண்டு, "மத்திய தொழிலாளர் நல ஆணையர்" என்னும் புதிய பதவியை உருவாக்கி, தொழிலாளர் நலனை பாதுகாத்தார்.

இவரால், உழைக்கும் மக்கள் அடைந்த நன்மைகள்


* பணி உத்திரவாதம்.
* ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை.
* தொழிற்சங்க அங்கீகார சட்டம். - Trade Union Act.
* மருத்துவ விடுப்பு - Medical leave.
* பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய பேறுகால விடுப்பு. - Maternity benefit Act.
* ஊழியர்களின் விடுப்புகளைச் சேர்த்து அதை பணமாகப்பெற்றுக்கொள்ளும் ஈட்டிய விடுப்பு - Earned leave.
* அலுவலகநேரம் போக மிகுதிநேரம் வேலைசெய்வோருக்கு அதிக ஊதியம் - Overtime - OT.

இதுபோன்ற தொழிலாளர் நலச்சட்டங்களெல்லாம் கொண்டுவந்தவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.

ஆனால், இவரை ஒரு சமூகத்தின் தலைவராகவும், அவர்களுக்காக மட்டுமே உழைத்தவர் என்றும் அவரை ஒதுக்குகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இவர் ஒரு சமூகத்திற்கு மட்டும் உழைத்தவரா? உழைக்கும் மக்கள் அனைவருக்கும் போராடியவர். அனைவரும் இவரை நினைவுகூர்ந்து நன்றிகூறவேண்டும்.

உலகத்து உழைப்பாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.

************

இன்றும் பலவூர்களில் 8 மணிநேரத்திற்கும் மிகுதியாக உழைப்பைச் சுரண்டும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

***************
தகவல் உதவி : இணையம்
தமிழ் கோ விக்ரம்

யானைபுக்க புலம் - புறம் 184

யானை புக்க புலம்: - புறநானூறு


நூல் : புறநானூறு - 184
பாடியவர் : பிசிராந்தையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை : பாடாண்டிணை
துறை : செவியறிவுறூஉ.



செய்யுள்: - { சீர்பிரிக்காத மூலப்பாடல் }


காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகு
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்து
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே.

{ பாண்டியன் அறிவுடைநம்பியுழைச்சென்ற பிசிராந்தையார் பாடியது }

விளக்கம் :

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Wednesday, April 29, 2020

பாவேந்தரின் பிறந்தநாள்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் கனகசுப்புரத்தினரின் பிறந்தநாள் இன்று. (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) 




..... சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியில்!
சிங்க இளைஞனே! திருப்பு முகம் திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப் பொய் விரித்து நம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென்பார் எனில்
வழிவழி வந்தவுன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

--- புரட்சிக்கவிஞர்

Monday, April 27, 2020

பத்துப்பாட்டு பாடினோரும் பாட்டுடைத்தலைவர்களும்

பத்துப்பாட்டு பாட்டுடைத்தலைவர்களும் பாடியோரும்:


தமிழவை இலக்கியகளில் ஓர் தொகுப்பாம் பத்துப்பாட்டு பாடியோர் பாடப்பட்டோர் பெயர்கள். இவற்றை எளிதாக நினைவிலிருத்திக்கொள்ள கீழேயுள்ள வாய்ப்பாடுகளையும் கற்றறிக.



௧) குமரவேளை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை

௨) சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநாராற்றுப்படை

௩) ஓய்மான்நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படை

௪) தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படை

௫) காவிரிப்பூம்பட்டினத்து பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டு

௬) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி

௭) பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை

௮) ஆரிய அரசன் பிரகத்தனை தமிழறிவித்தற்கு கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு

௯) சோழன் கரிகாற்பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை

௰) பல்குன்றக்கோட்டத்து செங்கண்மாத்து வேள்நன்னன் சேய் நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம்

**********************************

நூல் தொகை:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பாட்டுடைத் தலைவர்கள்:

முருகாறு செவ்வேள், பொருநாறு பாலை
கரிகாலன், நெடுஞ்செழியன் காஞ்சி - இருபாணும்
நல்லியக் கோடன் இளந்திரையன், நன்னன் கடாம்
கல்வித் தலைவர் கருது.

பாடியோர்:

முருகு நல் வாடையும் கீரன், முடத்தாமக் கண்ணி பொருந்
மருவு பாண், பாலை உருத்திரங் கண்ணன், மகிழ் சிறுபாண்
புரியும் நத்தத்தன், மருதன் காஞ்சி, நப்பூதன் முல்லை,
வருமெங் கபிலன் குறிஞ்சி, மலைகடாம் கௌசிகனே.

********************
நன்றி. வணக்கம்
உதவி : இணையம் மற்றும் பத்துப்பாட்டு நூல்கள்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

தமிழ்நூல்களில் மலர்கள்

பழந்தமிழ் நூல்களில் நம் பழந்தமிழ் மலர்கள்


நம் பழந்தமிழ்நாட்டில் முன்னைக்காலத்தில் பலவகையான மலர்கள் இருந்திருக்கின்றன. இயற்கையோடு இயைந்திருந்த தமிழர்கள், அவர்கள்தம் இலக்கியங்களிலும் அம்மலர்களைக் குறிப்பிட்டுப்பாடியுள்ளனர். அத்தகைய மலர்களின் பெயர்களை வலைத்தளத்தில் தேடியெடுத்து, இங்கே உங்களோடு பகிர்ந்து, நம் தமிழகத்தில் இத்தனை மலர்கள் இருந்தனவா என்று வியந்து மகிழ்கிறேன். குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்ட 99 மலர்களின் பட்டியலை விடுத்து மற்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மட்டும் இங்கே தொகுத்துள்ளேன். இப்பட்டியலில் குறிஞ்சிப்பாட்டின் மலர்களும் சிற்சில இடம்பெறும். அவை குறிஞ்சிப்பாட்டிலும் அந்தந்த நூல்களிலும் இடம்பெறுபவையாகும். நன்றி.

- தமிழ் கோ விக்ரம்




சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்


வைகையாற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள். இங்கு 24 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.(விரிமலர்) அதிரல்,
2.குடசம்
3.குரவம்
4.கோங்கம்
5.செண்பகம் = சண்பகம்
6.செருந்தி
7.சேடல்
8.தளவம்
9.திலகம்
10.நாகம்
11.(கொழுங்கொடிப்) பகன்றை
12.பிடவம்
13.மரவம்
14.வகுளம்
15.வேங்கை
16.ஓங்கல்
17.குருகு
18.கூதாளம்
19.வெண்கூதாளம்
20.பாடலம்
21.மயிலை
22.மருதம்
23.முசுண்டை
24.வெதிரம்

மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்


மணிமேகலை மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை,

1.இலவம் - எரிமலர் இலவம்,
2.குடசம்,
3.குரவம்,
4.குருந்து,
5.கொன்றை,
6.சண்பகம் – பெருஞ்சண்பகம்,
7.செருந்தி,
8.தளவம்,
9.தாழை - முடமுள் தாழை,
10.திலகம்,
11.நரந்தம்,
12.நாகம்,
13.பிடவம்,
14.புன்னை - பரந்து அலர் புன்னை,
15.மரவம்,
16.வகுளம்,
17.வெட்சி - செங்கால் வெட்சி,
18.வேங்கை,
19.(கொழும்பல்) அசோகம்,
20.வெதிரம்

பரிபாடல் 11-ல் தொகுக்கபட்ட மலர்கள் மற்றும் அவற்றில் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. அவை,


1. கணவிரி
2. காந்தள்
3. சண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)
4. சுரபுன்னை (கரையன சுரபுன்னை)
5. தோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)
6. நீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)
7.புன்னாகம் (வரையன புன்னாகம்)
8.மாமரம் (தண்பத மனைமாமரம்)
9.வாள்வீரம்
10. வேங்கை (சினைவளர் வேங்கை)

பரிபாடல் எண் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்


பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

1.அரவிந்தம்,
2.அல்லி,
3.கழுநீர்,
4.குல்லை,
5.சுரபுன்னை,
6.ஆம்பல்,
7.குருக்கத்தி,
8.சண்பகம் - மணங்கமழ் சண்பகம்,
9.நறவம்,
10.நாகம்- நல்லிணர் நாகம்,
11.பாதிரி,
12.மௌவல்,
13.வகுளம்.

ஐங்குறுநூற்றில் இளவேனிலில் மலரும் பூக்கள் என்று சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன.

பாடல் எண் 341 முதல் 357

1.அதிரல் – ஐங்குறுநூறு எண் 345
2.எரிக்கொடி - 353
3.காயா - 412
4.குரவம் - 357
5.கொன்றை _  412
6.கோங்கம் –  343
7.தளவம் - 412
8.நுணவம் – 342
9.நெய்தல் - 412
10.பலா – 351
11.பாதிரி –  346
12.பிடவு - 412
13.புன்கு – 347
14.மரவம் -  357
15.மராஅம் – 348
16.மா – 349
17.முல்லை - 412
18.வேம்பு -  350

திருமுருகாற்றுப்படையில்


1.கணவீரம்(செவ்வரளி)

நாலடியாரில்


1.குவளை
2.ஆம்பல்
3.நெய்தல்
4.கொட்டி

திருக்குறளில் இடம்பெறும் மலர்கள் 


1.அனிச்சம்,
2.குவளை.

அடியேன் வலைத்தளத்தில் தேடிக்கிடைத்தவை இவ்வளவே. இதை படிக்கும் தமிழறிஞர்கள் இன்னும் பன்னூல்களில் பன்மலர்களுள்ளன நீரறியீர் என இகழ்ந்துரைக்காது, நீவீரறிந்த மலர்களை இங்கே பதிவிடுங்கள் என அன்போடு வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்களின் படங்கள்

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு - கபிலரின் குறிஞ்சிப்பாட்டு:


99 மலர்கள் இடம்பெற்றுள்ள குறிஞ்சிப்பாட்டின் பாடல் வரிகள் இது. இப்பாடலில் உள்ள பல மலர்களை நாம் இதுவரை கண்டிரோம். கிடைத்தற்றகிய அம்மலர்களின் படங்கள்.

இத்தொண்ணூற்றொன்பது மலர்களின் படங்களைக் காண இங்கே சொடுக்குக.

https://m.facebook.com/vikramkumar.g.7/albums/469839543148455/?ref=opera_speed_dial




நூல் : குறிஞ்சிப்பாட்டு
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : அறத்தொடுநிற்றல்
பாவகை : ஆசிரியம்

செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள  65

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா  70

விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங்  75

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை  80

ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க     85

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி  90

நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு  95

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் 
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக.

          -கபிலர்


நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

தென்காசி கோயில்

"யாராகிலும், இத்தென்காசிமேவு திருத்தலத்து வாராததோர் குற்றம் வந்தால் அதை நேராகவே வந்து தடுப்பார் எவரோ அவர் சீரார் திருவடி என் திருமுடிமேல்"      ---- வரகுணபாண்டியன்



==========================

வரகுணபாண்டியன் சொல்லிய இச்செய்தி, இன்றும் தென்காசி திருக்கோயிலில் கல்வெட்டாக உள்ளதாம்.

யானையை விழுங்கும் பாம்பு சிற்பம்

யானையை விழுங்கும் பாம்பு சிற்பம்:


சோழர்கள் கட்டிய கோயில்களில் வாயிற்காவலர்களின் போர்க்கருவிகளில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும், அப்பாம்பு ஒரு யானையை விழுங்கும். இப்படிப்பட்ட ஓர் அரிய கற்பனை சோழர்களுக்கு எப்படி உருவானதென்று எண்ணும்போது, அதற்கான விடை திருஞானசம்பந்தர் பாடிய திருக்கயிலாயமலை தேவராப்பதிகத்தின் இரண்டாம் பாடலிலுண்டு.



1ஆம் திருமுறை, 68ஆம் பதிகம், 2ஆம் பாட்டு:


"புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
"பரியகளிற்றை யரவுவிழுங்கி" மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே."

பொழிப்புரை:

பெரிய களிற்றை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமைமங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.

***********
இதைப்படித்துவிட்டு, அப்படியே சிற்பங்களில் வடித்துள்ளனர் சோழர்கள். யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியது, அப்பாம்பு சுற்றியிருக்கும் கருவி எவ்வளவு பெரியது, அக்கருவியையாளும் வாயிற்காவலன் எத்தகைய ஆற்றலுடையவன், அவர்களே இறைவனின் வாயிற்காவலனாக இருந்தால், உள்ளே உறையும் இறைவன் எத்தகைய ஆற்றலுடையவன் என்பதை குறிப்பால் உணர்த்தும் சிற்பம் இது என்பர்.

ஞானசம்பந்தரின் இப்பதிகத்திற்கு முற்பட்ட காலத்தில் கோயில்களில் ஏதேனும் இந்த சிற்பம் வடிக்கப்பட்ட சான்றுகள் உள்ளனவா என்பதை நண்பர்கள் அறிந்தால் தெளிவிக்கவும்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Sunday, April 26, 2020

நாம் தமிழரென்று பாடு - பாவேந்தர்

நாம் தமிழர் என்று பாடு : புரட்சிக்கவிஞர்




நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம்
தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு!

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு!

நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்றுபாடு
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு?-தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!

முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு-நீ
முன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு-நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு-தமிழர்
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!

                                 - பாவேந்தர்

Saturday, April 25, 2020

ஆண்டாளின் நாச்சியார் திருமொழிகள் சில :

ஆண்டாளின் நாச்சியார் திருமொழிகள் சில :




சேய்த்தீர்த்தமாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே.

உருவுடை யாரிழை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டு வைகல்

தேசமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருகைக ளால்லென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுமென் வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

பொங்கியபாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோராசையினால் என் கொங்கைகிளர்ந்து குமைத்துக்குதுகலித்து

தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வர்க்கு
தன்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்

அவன் மார்பணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்பில் கொணர்ந்து புரட்டீரே

ஆராவமுத மனையான் அமுதவாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே

குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்றகுற்றமவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே.

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கைதன்னை கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன்மார்விலெறிந்து என்னழலை தீர்வேனே

கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

தமிழ்நூல் காணொளிகள் சில

தமிழ்நூல் சிலவற்றின் காணொளி வடிவம்



தமிழைப்பற்றிய சில காணொளிகளை அவ்வப்போது உருவாக்கி வலையொளியில் (Youtube) பதிவேற்றியிருந்தேன். அதையெல்லாம் தேடிப்பிடிக்க சிறிது இடர்ப்பாடாக இருந்தது. அதனால் அவற்றின் (Link) இணைப்புகளையெல்லாம் தொகுத்து ஒரு பதிவாக பதிவிட்டுள்ளேன். இன்னும்பல காணொளிகளை உருவாக்கவேண்டும். நேரங்கிடைக்கும்போது உறுதியாக தமிழ்நூல் காணொளிகளை உருவாக்குவேன். நன்றி வணக்கம்.

தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம் காணொளி:

https://m.youtube.com/watch?v=BoXs-TzasDw


தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு காணொளி:

https://m.youtube.com/watch?t=255s&v=iEYveHCG7iQ


தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் காணொளி:


ஏழுவள்ளல்களைப் பற்றிய சிறுபாணாற்றுப்படை காணொளி:

https://m.youtube.com/watch?v=aH7ziB024iY


குறிஞ்சிப்பாட்டின் ௯௯ மலர்கள் காணொளி:

https://youtu.be/E9O1kDFi3Ts

https://m.facebook.com/story.php?story_fbid=1054492011349869&id=100003672416107


குறிஞ்சிப்பாட்டு - 214 அடிகள் காணொளி :

https://youtu.be/rYBnSlbSVEg


பட்டினப்பாலை - 136 அடிகள் காணொளி:

https://youtu.be/Vn1EkI1nMao


நெடுநல்வாடை - சில பாட்டடிகள் க்காணொளி :

https://youtu.be/Zl2nrrmpYb0


திருப்பரங்குன்றத்து திருமுருகாற்றுப்படை காணொளி:

https://m.youtube.com/watch?t=35s&v=gVman29baOg


பதினொன்றாம் திருமுறை திருமுகப்பாசுரம் காணொளி:



நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

பொருநராற்றுப்படை பாடினியின் முடிமுதல் அடிவரை அழகு கூறல்

பொருநராற்றுப்படை:


நூல் : பொருநராற்றுப்படை
இயற்றியவர் : முடத்தாமக் கண்ணியார்
தலைப்பு : பாலையாழின் அமைப்பு


செய்யுள்:


குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்குஅழல் உருவின் விசிஉறு பச்சை,

எய்யா இளம்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்,
பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை
அளைவாழ் அலவன் கண்கண்டு அன்ன,
துளைவாய் தூர்ந்த துரப்புஅமை ஆணி

எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண்-நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்குஇரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கைத் திண்பிணித் திவவின்

ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல்உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணம்கமழ் மாதரை மண்ணி அன்ன,
அணங்குமெய்ந் நின்ற அமைவுஅரு காட்சி

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை.

=========================================

உரை:

நடுவிடம் உயர்ந்து அதன் இருபக்கங்களும் தாழ்ந்திருக்கும் வடிவினை உடையது யாழின் பத்தல் என்னும் உறுப்பு. இப்படி நடுவிடம் உயர்ந்தும் பக்கங்கங்கள் தாழ்ந்தும் உள்ள பத்தலின் வடிவம் மானின் குளம்பு அழுந்திய ஈரத்தரையைப் போல் உள்ளது. பத்தலின் மேல்பகுதி தோலால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. அத்தோலின் நிறம் எரிகின்ற விளக்குச் சுடரின் நிறம்போல் இளமஞ்சள் நிறத்திலுள்ளது. பத்தல்மேல் போர்த்தப்பட்டுள்ள தோலின் பிளவுபட்ட நடுப்பகுதியை இணைத்துக் கூட்டி மிகநேர்த்தியாகத் தையல் போடப்பட்டுள்ளது. இத்தையல் இளஞ்சூலுற்ற சிவந்த பெண்ணின் அடிவயிற்றின் நடுவே மென்மையாக ஒழுங்குபடக் கொப்பூழ் நோக்கிச் செல்லும் மயிரொங்கினைப் போல் காட்சியளிக்கிறது. தோல் போர்த்தித் தைக்கப்பட்ட பத்தலின் பகுதிகளை இணைக்கத் துளையிடும் கருவியால் துளைபோட்டு அத்துளைகளின் வழியே ஆணிகளைக் கொண்டு முடுக்கப்பட்டுள்ளது. அப்படி முடுக்கப்பட்ட ஆணிகள் வளைகளில் மறைந்து வாழும் நண்டுகளின் கண்களைப் போல் தோன்றுகின்றன.

பத்தலின் உட்புறம் குடைந்தெடுக்கப்பட்டு அதன் மேற்பகுதி அரைவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அவ் அரைவட்டத்தின் தோற்றம் எட்டாம் நாள் நிலவினைப் போன்று செம்பாதி வடிவில் அமைந்துள்ளது. போர்த்தப்பட்ட தோலின் உட்புறத்தே உள்ள பத்தரின் வெற்றிடம் உள்நாக்கு இல்லாத வெறும்வாயாக அமைந்துள்ளது. பத்தலோடு பொருந்தி வளைந்து நீண்டுள்ள நரம்புகள் கட்டும் தண்டுப்பகுதி கரும்பாம்பு தலையெடுத்து நிற்பதனைப் போலுள்ளது. வளைந்து நீண்டுள்ள அத்தண்டுப் பகுதியில் நன்கு இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளன வார்க்கட்டுகள். இவ் வார்க்கட்டுகள் கரிய நிறமுடைய பெண்ணின் முன்கைகளில் அழகுற அடுக்கி அணிவிக்கப்பட்டுள்ள வளையல்களை ஒத்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட குத்தலரிசியாம் தினையரிசியை நிறத்தால் ஒத்ததாக உள்ளன யாழில் கட்டப்பட்டுள்ள நரம்புகள். விரலால் இசைக்கப்படும் அந்நரம்புகளும் குற்றமற்றனவாகத் தெரிவுசெய்யப்பட்டு யாழில் விசித்துக்கட்டத் தொடர்ச்சியினை உடையதாக அமைந்துள்ளன. முழுமையாகப் பார்க்கும்பொழுது யாழுக்குரிய இசைத்தெய்வம் நிலைபெற்றுள்ள பாலையாழின் இனிய அழகிய தோற்றமானது ஒப்பனைகளால் அழகூட்டப்பட்ட புதுமணப் பெண்ணின் கோலத்தை ஒத்துக் கவினுறக் காட்சியளிக்கின்றது.

இப்படிக் கவினுறக் காட்சியளிக்கும் பாலையாழ் தோற்றத்தில் மட்டும் இனிமை யுடையதாக இருக்கவில்லை. வழிப்பறி செய்து மக்களைத் துன்புறுத்தும் ஆறலைக் கள்வர்கள் தம் ஆயுதங்களை யெல்லாம் கைவிட்டு அருளின் எதிர்மறைப் பண்பாகிய போர்க்குணத்தை அவர்களிடமிருந்து நீக்குகின்ற இனிய இசையினைத் தம்மகத்துக் கொண்டிருத்தலால் நம்மைப் பிணைக்கும் பண்புடையதாகவும் திகழ்கின்றது.

உதவி : பொருநராற்றுப்படை நூல்
நன்றி. வணக்கம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்
மதங்கசூளாமணியார்

குடி என்பதன் பொருள்

குடி என்பது தொழில், பணி, வேலை என்பவற்றையே குறித்தன:




நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
-அப்பர்

பொருள் : நாம் யாருக்கும் அடிமையில்லை கூற்றுவனுக்கும் அஞ்சமாட்டோம்.

யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்
-மணிவாசகர்.

பொருள் : யாம் யாருக்கும் அடிமையில்லை எதற்கும் அஞ்சமாட்டோம்.

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல்ஆமே
-நம்பியாரூரர்.

பொருள் : அப்பனே இறைவனே அன்றே நான் உனக்கு அடிமையாகிவிட்டேன் இப்போது இல்லை என்று சொல்வது தகுமோ?

***********************

ஈண்டு குடியல்லோம் என்று சொல்லப்பட்டது, அடிமையில்லை என்பதைக்குறிக்கிறது. அடிமை அல்லது வேலையாள் என்னசெய்வான்? ஆண்டான் இட்ட ஏவலை பணியைச்செய்வது அடிமையின் கடன். அதுவே அவன் வேலை அல்லது குடி.

நாம் இப்போதும் பயன்படுத்துகிறோம். நமக்கு யாராவது ஒருவேலையைச் செய்யச்சொன்னால் "நான் என்ன உனக்கு ஆளா?" என்று கேட்கிறோம். ஆகவே, வேலையைத் தொழிலைச் செய்பவன் "ஆள்" அல்லது "குடி".

மேற்கண்ட திருமுறை வரிகள் மூன்றனுள், பணி வேலை அல்லது தொழிலாகிய குடி என்னும் சொல், அப்பணியைச் செய்யும் மனிதனுக்கு ஆகுபெயராகி பணியைச்செய்பவன் "குடி" என்று ஆனது. அதனாலேயே "குடியல்லோம்" "ஆளாய்" என்று கூறினர்.

அதைப்பின்பற்றியே குறிப்பிட்ட பணியை செய்பவர்கள்(மக்கள்) அந்த குறிப்பிட்ட குடிகள் எனப்பட்டனர்.

வேட்டுவக்குடி - வேட்டைத்தொழிலர்
ஆயர் குடி - ஆமேய்க்குந்தொழிலர்
பறைக்குடி - பறைத்தொழிலர்
போர்க்குடி - போர்த்தொழிலர்
பாணர்க்குடி - பண்பாடுந்தொழிலர்

இன்னின்ன தொழிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு இடத்தில் தங்கிவாழ்ந்தனர். இப்போது அதே வேலையாகிய குடி என்னும் சொல் மக்கள் கூடிவாழ்ந்த வீட்டிற்கும் வாழ்ந்த பகுதிக்கும் அதாவது ஊருக்கும் ஆகுபெயராகியது. குடி என்று முடியும் பலவூர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இவ்வாறு இருந்த மக்கள் தத்தமக்குத் தெரிந்த தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தகாலத்து எப்பாகுபாடும் இல்லை.

பின்னே ஆரியன் வந்தான், பிணக்கில்லா மக்களின் ஒற்றுமையைப்பார்த்து, பிளவை உண்டாக்கி, இன்னின்ன தொழில் இழிவென்றும் உயர்வென்றும் மக்களின் மனங்களில் நஞ்சை விதைத்தான். சாதி என்னும் சொல்லையும் நம்மேல் திணித்தான். நாமும் மயங்கி அவனின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டோம். சாதிகளெனப்பிரிந்தோம். இப்போது அவன் வாழ்கிறான், நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம்.

அறிவாய் தமிழா, ஆரியச்சாதியென்பது உனதல்ல.
உன் ஒற்றை அடையாளம் நீசெய்த அனைத்துத் தொழில்களையும் உள்ளடக்கிய "தமிழ்க்குடித்தமிழன்"

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

ஓரெழுத்தொருமொழி




1) அ – அழகு, சிவன், திருமால், திப்பிலி
2) ஆ – மாடு. அற்பம், மறுப்பு, துன்பம்
3) இ – அண்மைச் சுட்டு
4) ஈ – அம்பு, அழிவு..ஒரு சிற்றுயிர், கொடு
5) உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன்
6) ஊ – ஊன், இறைச்சி.உணவு, திங்கள், தசை
7) எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி
8) ஏ – ஏவுதல், அம்பு. இறுமாப்பு, மேல் நோக்கல்
9) ஐ – நுண்மை,, அழகு.அரசன், இருமல், குரு, கோழை
10) ஓ –ஒழிவு, மதகுப் பலகை. கொன்றை, உயர்வு,நினைவு
11) ஔ – நிலம், விளிப்பு, கடிதல்,
12) க – நெருப்பு.,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம்
13) கா – சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை
14) கு – பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம்
15) கூ – கூவு, நிலம், பூமி
16) கை – கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல்
17) கோ – அரசன்,அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல்
18) கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.,கொள்ளு, தீங்கு
19) சா – இறத்தல், ‘சாவு’ என்று ஏவுதல், பேய், சோர்தல்
20) சீ – அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில்
21) சூ – சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல்
22) சே – சிவப்பு., இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை,
23) சோ – மதில்.அரண், உமை, வாணாசுரன் நகர்
24) ஞா – கட்டு, பொருந்து
25) த – குபேரன், நான்முகன்
26) தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி,
27) தீ – நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு
28) து – எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்” என ஏவல்
29) தூ – தூய்மை,தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை
30) தே – கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம்
31) தை -, தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
32) ந – இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து
33) நா – நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை
34) நீ – முன்னிலை ஒருமைப் பெயர்
35) நு – தோணி, நிந்தை, நேரம், புகழ்
36) நூ – எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை,
37) நே – அன்பு, அருள், நேயம்
38) நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல்
39) நொ – துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை
40) நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை
41) நௌ – மரக்கலம், கப்பல்.
42) ப – காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 – என்பதன் குறி
43) பா – பாடல்,அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு
44) பி – அழகு.
45) பீ – மலம், தொண்டி அச்சம்.
46) பூ – மலர், அழகு, இடம்,இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை
47) பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல்
48) பை – பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம்,
49) போ – ‘செல்’ என்று ஏவுதல்.
50) ம – இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம்
51) மா – ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல்
52) மீ – ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்
53) மூ – மூன்று, மூப்பு,
54) மே – மேன்மை, மேம்பாடு, அன்பு
55) மை – இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம்
56) மோ – மூக்கினால் மோந்து பார்த்தல்
57) யா – ‘யாவை’ , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல்
58) வா – ‘வா’ என்று அழைத்தல்.
59) வி – விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை,அழகு
60) வீ – பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது
61) வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல்
62) வை – ‘வை’ என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம்

தமிழ்நூல் மற்றும் புலவர்கள் - பிறரின் பதிவு

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.தேவாரம் 2.திருவாசகம், 3.திருவருட்பா, 4.திருப்பாவை 5.திருவெம்பாவை 6..நாச்சியார் திருமொழி 7. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதி
களைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்,   2. இராமதேவர், 3. கும்பமுனி,  4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு, 15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர்,  5.இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7. புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9.மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14. விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18.திரிகோணச்சித்தர்.

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.

1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி,
6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்ச
முனி,  9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல். 

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணா
னந்தர், 6. போகர்,  7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி 12.அழுகணி.13. பாம்பாட்டி,  14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர்,  23, அகப்பேய்,  24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர்,  32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்ட
வசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று.

தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா...

இன்னும் ஏதாவது விடுபட்டு இருக்கா???

தொல்காப்பிய பேச்சு வகைகள்

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:




பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார். எந்த மொழியில் இத்தகைய சொல்லாக்கம் உண்டு?

"பொங்கல் திருநாள்" அல்ல "பொங்கற்றிருநாள்"

பொங்கல் திருநாளா? பொங்கற்றிருநாளா?


பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். அதில், பொங்கல் திருநாள் என்பதை பொங்கற்றிருநாள் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பரொருவர், இப்படி எழுதுவது தவறு, பொங்கல் திருநாள் என்பதே சரியென்றார். அப்போது நேரமின்மையால் ஏதும் மறுமொழியளிக்கவில்லை. அவரின் கருத்தை மறுக்கும் பதிவே இது. அதற்காக மட்டுமல்ல, அறியாதோரும் அறிந்துகொள்ளக்கூடும். அதனாற்றான் பதிவிடுகிறேன். எனக்கும் இலக்கணநூல்களை மீண்டும் புரட்டும் வாய்ப்புகிடைத்தது. இதைப்படித்தபிறகும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இதற்கு மறுப்பறுப்புப்பதிவை தக்க சான்றுகளுடன் இடலாம்.

பொங்கல் திருநாள் என்றெழுதுவது புணர்ச்சியிலக்கணத்தின்படி முதற்கண் தவறு. இதை, இருசொற்களாகப் பிரித்தல்கூடாது. தமிழ்நாடு அரசு என்பதைப்போல்தான். இதையும் பிரித்தல்கூடாது. பிரித்தால் இருவேறு சொற்களாகும். தமிழ்நாடுஅரசு, பொங்கல்திருநாள் என்று ஒரே சொல்லாக எழுதவேண்டும். இப்படி எழுதுங்கால், இரண்டு சொற்களும் புணரவேண்டும். அப்போது,
தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு

பொங்கல் + திருநாள் = பொங்கற்றிருநாள்

இப்புணர்ச்சியின் இலக்கணம் யாதெனின்,


தொல்காப்பியம் 149


"வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்கூறு இயற்கை ஆவயினான"

           
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தொகைமரபில், உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சியை விளக்குங்கால், மேலே பல விதிகளைக்கூறிவிட்டு, இந்நூற்பாவில், லகர,னகர மெய்யீறுகள் நிலைமொழியினீற்றில் வந்து, வருமொழிமுதலில் தகர, நகரங்கள் வந்தால், அவை திரிந்து றகர, னகரங்களாகும் என்கிறார்.

ஈண்டு, பொங்கல்+திருநாள் என்பதில் ல்+தி, லகர மெய்யீறும் தகர வல்லெழுத்தும் புணருங்கால், தகரந்திரிந்து றகரம் வந்தது.

நன்னூலாரும் இதற்கு விதிகூறுகிறார்.

நன்னூல் 227


"லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி"

லகர,ளகர மெய்யீறுகள் வந்து வல்லெழுத்து வருங்கால், அவைதிரிந்து றகர,டகரங்கள் வரும் என்கிறார்.

மேற்கூறிய இவ்விரு நூற்பாக்களின் புணர்ச்சிவிதியின்படியே 40 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் இலக்கணமுறைப்படியே வழங்கிவந்துள்ளனர். (ஆனால், இப்போது புணர்ச்சியிலக்கணத்தின்படி நான் என்னவெழுதினாலும், அதையெதிர்க்க ஒருகூட்டமே இங்குண்டு)

இப்புணச்சிச்சான்றுகள் :


(பரிபாடலின் திறம் விளக்கும் பாட்டு)
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற்_றிறம்.

பரிபாடல் + திறம் = பரிபாடற்றிறம்

******

நேமிநாதம் 85ஆம் பாட்டு:
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் #_கடிசொற்_றிறம்.

கடிசொல் + திறம் = கடிசொற்றிறம்







******

சொல் + திகழும் = சொற்றிகழும்
நல் + தவம் = நற்றவம்
கல் + தூண் = கற்றூண்
சொல் + துணை = சொற்றுணை
நல் + துணை = நற்றுணை
பாடல் + திரட்டு = பாடற்றிரட்டு
அதனால் + தான் = அதனாற்றான்
பன்னூல் + திரட்டு = பன்னூற்றிரட்டு
பொழில் + திருப்புன்கூர் = பொழிற்றிருப்புன்கூர்
முதல் + திருமுறை = முதற்றிருமுறை
முதல் + திருப்பதிகம் = முதற்றிருப்பதிகம்
நல் + திணை = நற்றிணை
நல் + தமிழ் = நற்றமிழ்
பொங்கல் + திருநாள் = பொங்கற்றிருநாள்

1971ல் பதிப்புச்செம்மல் தாமோதரனாரின் பதிப்புகளை ஒருநூலாக, யாழ்ப்பாணத்தில் ஒரு பதிப்பகம் வெளியிட்டுள்ளது, அவ்வாண்டின் பொங்கலன்று. அந்நாளை எண்ணிட்டுவிட்டு பொங்கற்றிருநாளென்றே எழுதியுள்ளார்.
இச்சான்றுகளடங்கிய அச்சடித்த நூல்களின் படங்களை இங்கு இணைத்துள்ளேன்.




இலக்கணம் வல்லோர் யாராயினும் யானெழுதிய சொல் தவறென்று தக்கசான்றுகளுடன் மறுத்துநிறுவினால், என் தோல்வியை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன்.

************

நன்றி. வணக்கம்.

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு


சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு :



ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக்கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன், கணிச்சியோன் போன்ற பெயர்கள் உள்ளன ஆனால் சிவன் என்ற சொல் இல்லை.





     பழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க
காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது
கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய
இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப் போற்றுவர். சங்க
இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும்.
இவ்விருவகை இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப்
பெறுகிறது. அவ்விலக்கியங்கள் காட்டும் சிவ வழிபாட்டு
நிகழ்வுகளில் குறிப்பிட்ட செய்திகள் மட்டும் இங்கே சுட்டிக்
காட்டப் பெறுகின்றன.
    தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பாண்டிய நாட்டில்
தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடிச் சங்கத்தை நிறுவிப் பணி செய்த
காலம் சங்க காலம் எனப்படும். கடல் கொண்ட
தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், தற்பொழுது உள்ள
மதுரையிலும் மூன்று சங்கங்கள் இருந்தன. அவை முறையே
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பட்டன.
கடைச்சங்கம் என்பது இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே
நிலவியதாகும். அச்சங்கப் புலவர்களால்     பாடப்பெற்ற
பாடல்களைக் கொண்டவையே பத்துப் பாட்டு எட்டுத்தொகைஎன்ற இலக்கியங்களாகும். அப்பாடல்களில் அக்காலத்தில்
வாழ்ந்த     தமிழ் மக்களது வாழ்வியல் நிகழ்ச்சிகள்
இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி கடவுள்
கொள்கையாகும். கடவுள் கொள்கையில் தமிழ் மக்கள்
மேற்கொண்ட தெய்வ வழிபாட்டு நெறிமுறைகள் பிரிவின்றிக்
காணப் பெறுகின்றன.
    சங்க இலக்கியங்களில் ஒரு தெய்வ வழிபாடு என்பது
அன்றிப் பல தெய்வ வழிபாடுகள் காணப் பெறுகின்றன. மக்கள்
வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள்
முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சி
நிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்
நடத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்
இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்
நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்
நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத்
திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும்
தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய தெய்வங்களின்
வழிபாடுகள் சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன.
இத்தெய்வ வழிபாடுகளோடு பேய், பூதம், யமன் போன்ற
அச்சத்தைத் தருவதற்கு உரிய சக்திகளையும் தெய்வமெனக்
கொண்டு வழிபடும் செய்திகள் சங்க இலக்கியத்தில்
காணப்பெறுகின்றன.
    பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில்
பேய் என்பது 'அணங்கு' என்ற சொல்லால் குறிக்கப் பெற்று
வழிபடப் பெற்றமை காணப்படுகின்றது. “துணங்கையம்
செல்விக்கு     அணங்கு     நொடித்தாங்கு” (அடி.459).
பட்டினப்பாலையில் பேயின் வழிபாடு இடம் பெற்றதைக்
கீழ்வரும் அடி உறுதிப்படுத்துகிறது.
    “பிணம் தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்” (வரி. 260).
    பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில்
முருக வழிபாட்டின் வரலாறு அமைந்துள்ளது. கூற்றுவன்
எனப்படும் யமனைப் பற்றிய வழிபாடு சங்க இலக்கியங்களில்
பலவாறு காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் அமைந்த ‘மாற்றரும்
சீற்றத்து மாயிருங் கூற்றம்’ (பா. 51) என்பதனைக் காட்டலாம்.
இத்தகைய சிறு தெய்வ வழிபாட்டோடு இறந்தவர்களைப்
புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை வழிபடுகின்ற நடுகல்
வழிபாடும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும்,
திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன.
திருமாலின் வழிபாடு சிவ வழிபாட்டிற்கு ஒத்த நிலையில் சங்க
இலக்கிய நூல்கள் பலவற்றிலும் காணப் பெறுகின்றது. திருமாலின்
10 அவதாரச் செய்திகளைப் பற்றிய நிகழ்ச்சிகள் பலவாறாக இடம்
பெற்றுள்ளன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாட்டு
முறைகள் நிலங்களின் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு தெய்வ
வழிபாடாகக் காணப் பெறுகின்றன. இவ்வழிபாடுகளோடு சிவ
வழிபாடும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க அளவில்
தனிநிலை பெற்று விளங்குகிறது.

1.2.1 எட்டுத்தொகை நூல்களில் சிவ வழிபாடு


    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ
வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ
வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும்
காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு
நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்
கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால்
குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான்.
அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை
என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான்,
ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,
ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்
பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,
மணிமிடற்றன், முக்கட் செல்வன்
 என்ற பெயர்களால்
அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண்
தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்
சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான்.
வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து
வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து
வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில்
தெரிகின்றது.
    மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்
எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப்
பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்
ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள்
ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும்
நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப்
பாடல்கள்     சிவபெருமானைப்     பற்றியனவே     ஆகும்.
இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப்
பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை
ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை
உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில்
அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன
மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’
என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில்
கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை
உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.
    இவ்வாறு     உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு
சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை
நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்
இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட
நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்
சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
    மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
             - (பரி.5, 25-27)


அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த
எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை
எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.
    தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
    மணிமிடற் றண்ணல்      - (பரி. 9, 6-7)


ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த
செய்தியை,
    ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
                 - (கலி - 81)
    ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்
                 - (புற - 198)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள்
என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை
அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்
குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள்
கூறுகின்றன.
    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக்
கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள்
எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக்
கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக
எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய
மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை
நாளில்     சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி
நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
    சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது
என்பதையும் அதனைச் செய்தவர்கள் அவிர்சடை முனிவர்கள்
என்பதையும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.


    கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
    புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே
                 - (புறம் - 251)


    சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின்
வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன.
வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள்
நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.
    அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டுநிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்
34ஆம் பாட்டில்,


    கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
    கடவு ளாயினும் ஆக
    மடவை மன்ற வாழிய முருகே     (பா- 34)


என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப்
பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும்
சிவபெருமானின் மூத்த     பிள்ளையாகிய யானைமுகப்
பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம்
பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண்
தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப்
பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை
அதற்குச் சான்றாகக் காட்டலாம்.
    இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்
பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்
சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

1.2.2 பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு


    பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு
முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது
பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின்
தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய
வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை
அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்
வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்ற
செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில்
சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும்.
மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள்
குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன்
குன்றுதோறும்     ஆடுகின்றவன்     என்பதை     நக்கீரர்
திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன்
பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.
    திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின்
திருத்தலங்களில் செய்கின்ற     வழிபாட்டு     முறைகள்
சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய
வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது
போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே
தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது
பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப்
பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம்
சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது.
    மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள்
பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில்
கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள்
இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.
    சிறுபாணாற்றுப்படையில்,     “ஆலமர் செல்வற்கு
அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)
என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி
பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்
பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப்
பெற்ற செய்தி,


    கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
    ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428)


என்றும்     குறிக்கப்பெறுகின்றன.     அதுபோலப்
பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில்
அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை
நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை
வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக்
கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,


    கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
    முக்கோல் அசைநிலை கடுப்ப     (36-37)


என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின்
தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும்
வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

1.2.3 தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு


    ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற
மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட
இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்
இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ
வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும்
சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.
அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள்,
கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில்
தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது
காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப்
பிரித்து     அந்நிலங்களுக்குரிய     தெய்வங்களையும்
குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று
தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப்
பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள்
என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது.
எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை
புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக்
(ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய
வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று
தொடங்குகின்ற தொல்காப்பியச்    சூத்திரம்     இதற்கு
எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு
தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில்
குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய
விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை
எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில்
கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு
சிறப்பிடம் பெற்றது என்பதைக் கொடிநிலை, கந்தழி, வள்ளி
என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய
நிலையாமை     பற்றி     புறத்திணையில் காஞ்சித்திணை
வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும்,
சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின்
சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது
எனலாம்.

1.2.4 திருக்குறளில் சிவ வழிபாடு


    சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு
குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை
என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம்
பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன்
முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப்
புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும்
தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை”
(குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை
எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது
மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்"
என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை
உடையவன் என்பதை உணர்த்தும்.
    திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர்
உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை
வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல்
திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை
நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை”
(350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும்.
“மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய
பெரியோரை நினைவுபடுத்தும்.
    “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர்
சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ்,
போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை
வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர்
இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம்
சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும்.
இவ்வாறு திருக்குறளில் சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்
சுட்டிக் காட்டப் பெற்றுத் தொல் பழந்தமிழ்நாட்டு
வழிபாட்டுமுறை உணர்த்தப் பெறுகிறது.



நன்றி. வணக்கம்
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் கட்டுரை.