Friday, April 24, 2020

சிறுபாணாற்றுப்படையின் ஏழுவள்ளல்கள்

சிறுபாணாற்றுப்படையில் சொல்லப்பட்ட ஏழுவள்ளல்கள் :


வணக்கம். சின்னாட்களுக்கு முன் வள்ளல்கள் பற்றிய விரிவான விளக்கங்களோடு பதிவிட்டிருந்தேன். சிறிய விளக்கங்களோடு அடுத்த பதிவில் பதிகிறேனென்று சொல்லியிருந்தேன். அதனால், இப்போது சிறுவிளக்கங்களுடன் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் ஏழு வள்ளல்களின் ஓவியங்களை சேகரித்துத்தொகுத்து இக்காணொளியை உருவாக்கி பதிகிறேன். இதுவும் நீண்ட பதிவாகவே அமைந்துவிட்டது. என்ன செய்வது? நம் தமிழ்ப் பண்பாட்டையும் அரசர்களைப் பற்றியும் சுருக்கமாக சொல்லமுடியமா என்ன? கணொளியை முழுமையாக கண்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் மக்களே. நன்றி வணக்கம்.

வள்ளல்கள் பற்றிய காணொளி இணைப்பு :  https://youtu.be/aH7ziB024iY

சிறுபாணாற்றுப்படையில் சொல்லப்பட்ட ஏழு வள்ளல்கள் :


௧) பேகன் :
மயிலுக்குப் போர்வை அளித்தவன்

௨) பாரி :
முல்லைக்குத் தேர் தந்தவன்

௩) காரி :
ஈர நன்மொழி கூறியவன் (councilman)

௪) ஆய் :
நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்.

௫) அதிகன் :
நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்

௬) நள்ளி :
துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்

௭) ஓரி :
தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.

- தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
நன்றி

No comments:

Post a Comment