தொல்காப்பியத்துள் விலக்கவேண்டிய 15 நூற்பாக்கள் :
தொல்காப்பியத்தில் விலக்கப்படவேண்டிய இடைசெருகல்கள் பலவுளவாயினும், பொருளதிகாரத்து மரபியலுள் நூற்பாவெண் 71 முதல் 85 ஈறாகவுள்ள 15 நூற்பாக்கள் கடிந்து விலக்கப்படவேண்டியனவாகும்.
இவை, மனுநூலின் நால்வண்ணப் பாகுபாட்டை வலியுறுத்துவனவாகவுள்ளன. நிலத்தால் பிரித்தலன்றி நிறத்தால் பிரித்தல் தமிழர்மரபன்று. இந்நூற்பாக்கள், பின்னோரால் தொல்காப்பியத்துள் செருகப்பட்டனவாகும்.
இப்பதினைந்து நூற்பாக்களை விலக்கினால், மற்றை நூற்பாக்களில் உயிர்வகை மரபின் தொடர்ச்சியைக்காணலாம். தமிழ்ர்களிடத்து நால்வண்ணப்பாகுபாட்டைத் திணிக்க தமிழர்களின் தற்போதைய முதநூலாம் தொல்காப்பியத்துள் 3,4ஆம் நூற்றாண்டுகளில் புகுத்தப்பட்டவையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பின்னாளில் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட உரையாசிரியன்மார்களும், இந்நூற்பாக்களையும் தொல்காப்பியரே இயற்றினாரெனக்கருதி உரைகண்டனர். இக்கருத்துகளையெல்லாம், தொல்காப்பியத்தை பத்தாண்டுகள் ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்ற வித்துவான் க.வெள்ளைவாரணனாரவர்கள் தம் ஆய்வுநூலில் தெளிவுறவிளக்கியுள்ளார். இவர் தொல்காப்பியத்தின் பண்டை உரைகளான சேனாவரையம், இளம்பூரணம், நச்சினார்க்கினியமென அனைத்து உரைகளையும் ஆய்ந்து இதைத்தெளிவுபடுத்தியவராவார்.
இந்நூற்பாக்களையெல்லாம் படித்துவிட்டுத்தான் பெரியாரவர்கள், தொல்காப்பியரை ஆரியக்கைக்கூலி என்று இகழ்ந்தார். இவ்வாய்வுகளெல்லாம் நடக்காதிருந்திருந்தால் நாமும் தொல்காப்பியரை ஆரிய கைக்கூலியென்றே இகழ்ந்திருப்போமென்பதில் ஐயமில்லை.
இதோ அந்நூற்பாக்களை இங்கே பதிவிட்டுள்ளேன். தமிழர்கள் இவற்றைக்கண்டு மயக்கங்கொளாது இப்பதினைந்து நூற்பாக்களையும் படிக்காது விலக்குதல்வேண்டும்.
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
**********************
பதிவிற்கு உதவிய நூல்கள்:
க.வெள்ளைவாரணனாரின்
1. தொல்காப்பிய வரலாறு நூல்.
2. மரபியல் உரைவளம் நூல்.
3. இளம்பூரணம் நூல்
4. நச்சினார்க்கினியம் நூல்
No comments:
Post a Comment