உடையேம் இலமே : புறம் 112 🌝 🌕
பாடியவர் : பாரி மகளிர் - ஆய்தொடி அரிவையர்
திணை : பொதுவியல்
துறை : கையறு நிலை
மூலப்பா :
அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவினெந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளா
ரிற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.
சீர்பிரித்த பா :
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்,எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
விளக்கம் :
பாரிமகளிர் என்றழைக்கப்படும் பாரியின் பெண்மக்கள் பாடுகின்றனர். இன்று முழுநிலா. இது போன்ற கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். எம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்தது. ஆனால், இன்று இந்த முழுநிலா நாளில் வென்றெறி முரசையுடைய வேந்தர்கள் எம் குன்றத்தையும் கைப்பற்றிக்கொண்டனர். யாமும் எம் தந்தை இல்லாதவர்களானோம்.(அங்கவை, சங்கவை என்று யாரும் வாதிற்கு வரவேண்டாம். பாரிமகளிரின் பெயர்கள் யாண்டும் குறிப்பிடப்படவில்லை).
😥😥😥😥😥😥😥😥😥😥
No comments:
Post a Comment