Friday, April 24, 2020

கள்ளற்றே கள்வநின் மார்பு

கள்ளற்றே கள்வநின் மார்பு : 😍


ஓவியத்தைப் புனைந்தவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால், கீழ்க்காணும் இக்குறளுக்கேற்ற படமிது.



இக்குறள், தலைவி தலைவனிடம் கூறுவதாக அமைந்துள்ளது. அவள் கூறுகிறாள், "கள்ளுண்ணுதல் இன்னாமை என்பதையறிந்தும் அக்கள்ளை உண்டு களித்தவர் மேலும் மேலும் கள்ளை விரும்புவர். அக்கள்ளிற்கு ஒப்பானது நின் மார்பு"

வள்ளுவரின் காமத்துப்பாலைப் படித்தவர்கள் வள்ளுவரை ஒருக்காலும் முனிவரெனவெண்ணார். காமத்தைச் செவ்வனே துய்த்துணர்ந்த நற்காமவேளென்பர். 😍 இக்குறளில் சுட்டப்பெறும் காமப்பொன்மார்பனை ஒத்துள்ளது கீழ்க்காணும் வள்ளுவரின் படம். புனைந்த ஓவியருக்கு வாழ்த்தும் நன்றியும்.

திருக்குறள் : காமம் / கற்பியல் /
புணர்ச்சிவிதும்பல் / குறள் 1288

இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

மணக்குடவருரை :


பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

எளிய உரை :

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக்கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

ஆங்கில உரை :

O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

************************

நன்றி. இனிய யா(கா)ம வணக்கம். 😍😍😍

No comments:

Post a Comment