Friday, April 24, 2020

சித்திரமேழிப் பெரியநாடு - பண்டைய உழவர் அமைப்பு

சித்திரமேழிப்பெரியநாடு :

எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண்பூமிச்சித்திரமேழி :


சித்திரமேழிப்பெரியநாடு என்பது 1057ஆம் ஆண்டு சோழர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய உழவர்களின் கூட்டமைப்பு ஆகும். இதில் வேளாண் பெருங்குடி மக்கள், வணிகர்கள், உழைக்கும் மக்கள் ஆகியோரும் அடங்குவர். வேளாண் மக்களின் உழுநிலங்கள் பறிக்கப்பட்டு வேறுமக்களுக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து இம்மக்கள் உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. அந்தக்காலத்து விவசாய சங்கம் போன்றது.

இது "எழுபத்தொன்பது நாட்டுப்பதினெண்பூமிச் சித்திரமேழி" என்றும் அழைக்கப்பட்டது. இதற்கு தனி அதிகாரம் இருந்தது. அரசர்களுக்கே உரிய மெய்க்கீர்த்தி என்னும் முறையும் இந்தக்கூட்டமைப்பு கொண்டிருந்தது. நீதிவழங்குதல், குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் உரிமையும் பெற்றிருந்தது. இது ஒரு தனி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட்டது. அரசோடு இணைந்து செயல்பட்டது.

இவ்வமைப்பின் கடவுள் பூமித்தாய், இதன் சின்னம் உழவுக் கலப்பை. மேழி என்றால் கலப்பை. சித்தரமாக வரைந்திருப்பர். இதைக் குறியீடாகக்கொண்டு செயல்பட்டனர். பத்து ஊர்களைக்கொண்டது ஒரு நாடு. அப்படி எழுபத்தொன்பது நாடுகளில் இது செயல்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எது எப்படியோ, தமிழர்கள் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே புரட்சிகள், முற்போக்கு அமைப்புகள், உழைக்கும் மக்களுக்கு உரிமைகோரும் அமைப்புகள் உருவாக்கியுள்ளனர் என்பது மிகவும் வியப்பும் பெருமையும் ஆகும்.



மெய்க்கீர்த்திகள் :


"பூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம் வளர
புகழக்க கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத்
திசையணைத்துஞ் செவிடு படாமைச்
சிதியமேழி தர்மம் இனிதுநடாதத்து"

*****

‘தென்தமிழ்வடகலை தெரிந்துணர்ந்து
நீதிசாத்திர நிபுணர்ஆகி
இன்சொல்லால் இனிதளித்து
வன்சொல்லால் மறங்கடிந்து
செங்கோலே முன்னாகவும்
சித்திரமேழியே தெய்வமாகவும்
செம்பொற்பசும்பையே வேலியாகவும்
உன்னியதுமுடிக்கும் ஒண்டமிழ்வீரர்
வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி'

*****

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment