கல்வெட்டு வாசகங்களும்..அதில் இடம் பெற்றுள்ள ஊர் பெயர்களும்..இளந்தை#சித்திரமேழி_நல்லூர்(நல்லூர்). தாசரபுரம்(தாசனபுரம்)..#தோறைப்புளி(தொரப்பள்ளி)#கூ பள்ளி(கூபள்ளிகுட்டை)...
மேற்காணும் படத்தில் உள்ள #சூலக்கல் எல்லைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது..
(பஸ்தி அருகே கண்டுபிடிக்கப்பட்டது)
மலைமீதுள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலின் கருவறையின் அருகில் உள்ள இந்த கற்பாறையில் பதிநான்குவரி கல்வெட்டு உள்ளது. தமிழ், மற்றும்,கிரந்தம் என இரண்டு மொழிகளில் உள்ளன.நாம் முதலில் மேற்கண்ட மலையின் கீழ் உள்ள கற்பாறை கல்வெட்டின் தொடர்ச்சிதான் இதுவும்.மேற்கண்ட இளந்தை எனப்படும் சித்திரமேழி #நல்லூர் கிராமத்தின் எல்லைகள் பற்றி விரிவாக சொல்லப்படுகிறது. சித்திரமேழி என்பது சோழர்காலத்தில் 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உழவர் இயக்கமாகும். சித்திரமேழி நாட்டார் எனும் குழுவினர் தகடூர் பகுதிமுழுவதும் பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு பரவலாக இருந்துள்ளனர்.
“இவர் தம்பிக்கும் பாண்டிக்கும் பொன்றைக் குடுத்து மன்றைக் கொண்டு தேபர்கும் ம
தண்டநாயக்கன் கங்கிய பையதும் இவர்க்கு ஸ்ரீ மித்தண்ட நாயக எச்சு பையனுக்கும் மிகை தண்ட நாயக யாரும் இந்நிலத்திற்கு எல்லையானது #சூழகல்லுக்கும வடக்கும் இறை இருத்தி …..#சுனையில் தாச புர பள்ளத்து கிழக்கும் இளந்தை கிரை ஏரிக்கு கிழக்கு யயப்பல்லகிரைக்கும் இறையிலி மேல் இயக்கிறை இறையின் மேல்கடை தோப்பும் அனுமும் முத்தரரும் …நடவுமே உள்ளக்க ..பள்ளிக்கு வந்த பெருவழிக்கு வடக்கு முர்சாதிக் ராசாதாமூர் கம்ப காலமே இவ்வாஷர்க்கு ஆறா ..க்கு ஆறுக்கு தெற்குத் #தோறைபுளிக்கு வடக்கும் கீழ பள்ளத்துக்கும் மேற்கும் மேலை சாசனத்திற்கு புஞ்சை நிலத்திலே சிறிய பத்துகண்டககழனியும் சந்திராத்து வரை செல்வதாக தாரை வார்த்து குடுதா நம்பதியாக வர்ஷ பூஜ பண்டிதர்க்கு தாராபூர்வம் பன்னி கொடுத்ததாக தண்ட நாயகன் நாம் இவன் மகன் கண்ட நாயக்க எச்சிமையனும் கண்ட நாயக்க செய்த தானம் யாரும் முச்சாதி காரனும் இவன் ராஜேந்திர மாராயனும் உலக உய்யக…ப் பாண்டியும் இத்தர்மம் நிலை நிற்க சாசனம் எ ழுத்து வித்தார் ஸ்ரீ மாதண்ட நாயக்கன் நாயக..ந் மருதை அழிவு செய்வான கங்கை கரையில் நூறாயிரம் குறால் பசுவையும் நூறாயிரம் பிராமரையும் கொன்ற பிரம்மக்தி யிரப்புனு…”
தேவதானமாக கொடுக்கப்பட்ட இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தின் எல்லைகளாக சூழகல்லுக்கும வடக்கும்,தாசரபள்ளத்திற்கு கிழக்கும்,ஆற்றுக்கு தெற்கும் தோறை புளியந்தோப்புக்கு வடக்கும், கீழபள்ளத்திற்கு மேற்கும் குறிப்பிடபடுகின்றன்.ஒவ்வோரு வருசபூசைக்கும் பத்துகண்டகம் விலைய கூடிய கழனியையும் தேவதானமாக வரிநீக்கி கொடுக்கப்பட்டுள்ளன. இதை யாறேனும் அழிவு செய்தால் அது கங்கை கரையில் நூறாயிரம் குறால் பசுவையும், நூறாயிரம் பிராமரையும் கொன்றதற்கு சமமாகும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
“..சாசன ….சகரையாண்டு ஆயிரத்து நாற்பத்தாய்தாவதில் பாச ஸ்வஸ்த்த ஸ்ரீ மகாமண்டலேஸ்வர மல்லன் கண்ட நாடு கொண்ட ராஜ்யம் செய்ய……………………………முரசு நாட்டுத் தெற்கற்றுச் செவிட பாடியில் எழுப்பித்த……நாலுஆயிரத்துக்கு.ஆறாதானத்துக்கு விசாகன் ..மகூ பள்ளி சித்திரமேழிநல்லூர் நாற்பாற் எல்லைக்குட்பட்ட மலைக்கு நடவுர் நஞ்சை ,புஞ்சை, மரம் ..ம எப்பேர்பட்ட இறைகள்..மஞ்சலப் படிகள் இந்த நார் குலோந்தங்க சோழ மாராயர் மஹாராய ராஜனுக்கு ..இ..ம..இந்த தர்மதான ராஜேந்திரசோழ முரசு நாடல்வர்……”
முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள செவிடபாடியில் இக்கோயில் எழுப்பட்டதாகவும் , இக்கோயிலின் ஆராதனையும்,அன்னதானமும், இடைவிடாமல் தொடர்ந்து நடைப்பெருவதற்காக இந்த நாட்டு சாலிபுரத்து விசாகன் ம#கூ பள்ளியும், இளந்தை எனப்படும் சித்திரமேழி #நல்லூர் கிராமத்தினையும், நஞ்சை ,புஞ்சை,தோட்டம், ஆகியவற்றை தேவதானமாக விட்டதையும், குலோந்தங்க சோழ மாராயர்.மற்றும் ராஜேந்திரசோழ முரசு நாடல்வர், போன்ற அதிகாரிகள் துணை நின்றதையையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மற்றை ஒருவரின் பதிவு.

No comments:
Post a Comment