திருவருட்பாவில் தமிழ் என்னுஞ்சொல்: ❤️
அருட்பேரொளி வள்ளற்பெருமான் நம் நற்றமிழை பலவாறு போற்றிப்பரவியுள்ளார். தெய்வத்தமிழே நம்மை இறைவனிடம் இட்டுச்செல்லும் என்று ஐயமற துணிகிறார். திருவருட்பாவில் தமிழ் என்று குறிப்பிட்டுள்ள வரிகளை சிறுதொகுப்பாக இங்கு பதிவிடுகிறேன். ஆறு திருமுறைகளிலும் சேர்த்து அடியேனுக்குக் கண்ணிற்பட்டவற்றைத் தொகுத்துள்ளேன். நன்றி.
"என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை"
"நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்"
"தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே"
"அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்"
"ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்"
"மூவர்தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல்உ ண்டருளைத் தருந்தென் ஒற்றியூர்"
"மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும்"
"வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
மாலை சூட்டுதும்"
"மதன இன்தமிழ் மாலையோ டணுபூமாலை சூட்டுதும்"
"வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே"
"நித்த னேஅது நீஅறி யாயோ
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே"
"திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்"
"சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியை"
"வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்"
"அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே"
"மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்"
"சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
தெய்வமே"
"நின்னைத் தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை தொடுத்திலேன்"
"பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்று"
"திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு"
"பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறுமாமுகன்மேல்
நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்க"
- இராமலிங்க வள்ளற்பெருமான்
நன்றி. வணக்கம். 🙏🙏🙏
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment