Friday, April 24, 2020

இளங்கோவடிகளின் உறவினர்கள்

சேரன் இளங்கோ : யார்




பெருஞ்சோற்றுதியஞ்சேரலாதன் மற்றும் வேளிர்வெளியன் வேண்மானின் மகள் நல்லினி இணையரின் பெயரன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மற்றும் சோழன்மணக்கிள்ளியின் மகள் நற்சோணை இணையரின் மகன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மற்றும் மாற்றாந்தாய், வேளாவிக்கோமான் பதுமனின் மகள் இணையரின் மகன்.

சிற்றப்பன் பல்யானைச்செல்கெழுகுட்டுவனின் மகன்.

சேரன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின் உடன்பிறந்த தம்பி.

சேரன் கடல்பிறக்கோட்டியசெங்குட்டுவனின் மனைவி வேண்மாளின் மைத்துனன்.

மாற்றாந்தாய் பதுமன்மகளின் மகன்கள் களங்காய்க்கண்ணி_நார்முடிச்சேரல் மற்றும் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகியோரின் அண்ணன்.

குன்றக்குறவர்கள் மற்றும் மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் கண்ணகியின் கதையைக்கூற, நெஞ்சையள்ளுஞ்சிலப்பதிகாரம் செய்தவர்.

இளங்கோவடிகள்.


***************************

குறிப்பு : கண்ணகி பத்தினிக்கோட்டம் அமைய காரணமாயவள் செங்குட்டுவனின் மனைவி #_வேண்மாளேயாவாள். இவளே, "நம் அகநாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளை பரசல் வேண்டும்" என்று சேரர்க்கு உரைத்தவள்.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment