தமிழில் இத்தனை தமிழ்களா? 😲 😍
பன்னிருதிருமுறைகளில் தமிழ் என்னுஞ்சொல்:
வணக்கம். பன்னாட்களுக்கு முன்பே, திருவருட்பாவில் தமிழ் என்னுஞ்சொல் எத்தனை இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதென்று ஓர் பட்டியலைப்பதிவிட்டிருந்தேன். இப்போது, சிவநெறி (சைவசமய) நூல்களான பன்னிருதிருமுறையில் எத்தனை இடங்களில் தமிழ் என்னுஞ்சொல் இடம்பெற்றிருக்கிறதென்னும் பட்டியலைத் தொகுத்துத்துள்ளேன்.
தமிழ் என்னுஞ்சொல் பன்னிருதிருமுறைகளில் எண்ணிலடங்காவிடங்களில் வருகிறது. ஆனால், அடியேன் இங்கு தொகுத்துள்ளது, தமிழ்மொழியை உயர்த்தியும் பெருமைபடவும் எடுத்தியம்பிய உரிச்சொற்களை மட்டுமே.
தமிழவை நூல்களிலும் சிலம்பிலும் நம்நாட்டிற்கு "தமிழ்நாடு" பெயர் இருந்ததென சிலசான்றுகளுண்டு. தொல்காப்பிய இளம்பூரணனாரின் உரையிலுமுண்டு. அதுமட்டுமின்றி காலந்தோறும் நம்நாட்டின் பெயர் "தமிழ்நாடே" என்பதற்கான சான்று இப்பன்னிருதிருமுறைகளில் உண்டு. இது 4ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரையிலான சிவநெறி நூல்கள் அடங்கிய ஓர் தொகுப்பாகும். பலநூற்றாண்டின் நூல்களில் ஆங்காங்கே "தமிழ்நாடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றையும் இத்தொகுப்பின் இறுதியில் தொகுத்துள்ளேன்.
வாழ்க தமிழும், தமிழரும், தமிழ்நாடும்.
தமிழ் என்னுஞ்சொற்றொகுப்பு :
01. திருநெறியதமிழ்
02. நிகரில்லனதமிழ்
03. துளங்கில்தமிழ்
04. நலங்கொள்தமிழ்
05. குன்றாத்தமிழ்
06. சொல்லார்தமிழ்
07. பரவார் தமிழ்
08. சீரார்தமிழ்
09. செந்தமிழ்
10. சீர்மிகுத்த தமிழ்
11. ஆராஅருந்தமிழ்
12. முடிவிலின்தமிழ்
13. தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்
14. தன்னியல் கலைவல தமிழ்
15. வித்தக மறைமலி தமிழ்
16. தூசெந்தமிழ்
17. நல்ல கேள்வித்தமிழ்
18. கலை முத்தமிழ்
19. வடமார் தமிழ்
20. பலந்தருதமிழ்
21. செந்தண்தமிழ்
22. பண்பொலி செந்தமிழ்
23. ஒளிர்பூந்தமிழ்
24. செறிவண் தமிழ்
25. வளருந்தமிழ்
26. சக்கரஞ்சீர்த்தமிழ்
27. ஞாலமல்குந்தமிழ்
28. தென்றமிழ்
29. நல்லசெந்தமிழ்
30. சந்தமார்ந்தழகாய தண்தமிழ்
31. மனமலிபுகழ் வண்தமிழ்
32. சந்துலாந்தமிழ்
33. சந்தமாலைத்தமிழ்
34. முத்தமிழ்
35. அருந்தமிழ்
36. சந்தமார் தமிழ்
37. பண்ணியல் தமிழ்
38. பண்ணாருந்தமிழ்
39. நற்றமிழ்
40. இன்றமிழ்
41. சொற்றமிழ்
42. ஒண்டமிழ்
43. தண்டமிழ்
44. வண்டமிழ்
45. உற்றதமிழ்
46. சீரின்மலிசெந்தமிழ்
47. சந்தம்நிறை தண்டமிழ்
48. பந்தமார் தமிழ்
49. சந்தமிகு தண்தமிழ்
50. பாவணத்தமிழ்
51. பொய்யாத்தமிழ்
52. உறுதமிழ்
53. பன்னுதமிழ்
54. செஞ்சொல்தமிழ்
55. உளங்குளிர் தமிழ்
56. பலங்கிளர்தமிழ்
57. பண்ணின்றமிழ்
58. பாவின்தமிழ்
59. குறையாத்தமிழ்
60. பயின்றமிழ்
61. அமுதமூறியதமிழ்
62. அமுதுறழ்தீந்தமிழ்
63. பாவார்ந்த தமிழ்
64. செறிதருதமிழ்
65. பெருந்தமிழ்
66. பொய்மையிலாத் தமிழ்
67. ஒண்டலைத் தண்டமிழ்
68. ஞானத்தமிழ்
69. எண்டிசை நிறைந்த தண்டமிழ்
70. சிவனருள் பெற்ற நற்றமிழ்
71. ஒண்முத்தமிழ்
72. செழுமலயத் தமிழ்
73. இன்பஞ்செய் தமிழ்
74. பாவேறிய மதுரத்தமிழ்
75. பயன்நிலவு ஞானத்தமிழ்
76. தொழில்பல மிகுத்ததமிழ்
77. மாதமிழ்
78. சுந்தரமார் தமிழ்
79. கனதமிழ்
80. இன்பத்தமிழ்
81. சொல்லார் தமிழ்
82. இன்னிசை வண்டமிழ்
83. தென்தமிழ்
84. மும்மைத் தமிழ்
85. மெய்மைப்பொருளாந்தமிழ்
86. வல்லாண்மையின் வண்தமிழ்
87. தாண்டகச்செந்தமிழ்
88. பரிவுறு செந்தமிழ்
89. வளத்தமிழ்
90. உயர்தமிழ்
91. பாவுறுசெந்தமிழ்
92. பாவலர் செந்தமிழ்
93. பாவுற்ற தமிழ்
94. கோதில் தமிழ்
95. இசைவண்தமிழ்
96. பண்ணார் பதிகத்தமிழ்
97. பெருவாய்மைத்தமிழ்
98. ஓங்குதமிழ்
99. கோதருதண்தமிழ்
100. பொங்குதமிழ்
101. தேன்பொழியும் செந்தமிழ்
102. செஞ்சொல்தமிழ்
103. செழுந்தமிழ்
104. நறுந்தமிழ்
105. அலர்ந்தசெந்தமிழ்
106. வம்பலர் செந்தமிழ்
107. உயர்தமிழ்
108. தங்குதமிழ்
109. அஞ்சொல்தமிழ்
110. குலவுதமிழ்
111. பதம் நிறைந்த செந்தமிழ்
112. மண்பரவும் தமிழ்
113. வளத்தமிழ்
114. பண்ணுறு செந்தமிழ்
115. இசைத்தமிழ்
116. ஒப்பில் வண்தமிழ்
117. இன்னிசை நிறைந்த செந்தமிழ்
118. இன்னிசைத்தமிழ்
119. மதுரமுத்தமிழ்
120. புலன்கொள் இன்தமிழ்
121. மும்மைநிலைத் தமிழ்
122. ஒப்பரிய தமிழ்
123. நீடுதமிழ்
124. பரவுறு செந்தமிழ்
125. இன்னிசைச்செந்தமிழ்
126. மொழிக்காதல் தமிழ்
127. பெருகு தமிழ்
128. பாங்குடை வண்தமிழ்
129. புணர்இசைச்செந்தமிழ்
130. சந்த முத்தமிழ்
131. பாவரும் தமிழ்
132. வாய்மை வண்தமிழ்
133. உரவுத்தமிழ்
134. மெய்ப்பொருள் வண்தமிழ்
135. நல்லிசைத்தண்தமிழ்
136. பாவலர்ந்த செந்தமிழ்
137. பழுதில் செழுந்தமிழ்
138. இசைவிளங்குந்தமிழ்
139. மருஈரத்தமிழ்
140. கன்னித்தமிழ்
141. மூவேந்தர்தமிழ்
142. புகழின்மிக்க தமிழ்
தமிழ்நாடு என்னுஞ்சொற்றொகுப்பு :
1. இருந்த தமிழ்நாட்டிடை
2. பொதியில் தமிழ்நாடு
3. ஆதரவால் தமிழ்நாட்டில்
4. மண்குலவு தமிழ்நாடு
5. பூழியர் தமிழ்நாட்டு
6. பெறல் தமிழ்நாடுற்ற
7. வண்தமிழ்நாட்டு எல்லை
8. பானல் வயல் தமிழ்நாடு
9. பூழியர் வண்தமிழ்நாட்டுத்
10. தென்தமிழ்நாடு செய்த
11. பொழிவண் தமிழ்நாட்டுச்
12. தன்தமிழ்நாட்டு மன்னன்
13. கன்னித்தமிழ்நாட்டு
14. மூவேந்தர் தமிழ்நாட்டுக்கு அப்பால்
15. இருந்த தமிழ்நாடுற்ற
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
தமிழ் வாழ்க. 🙏
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment